2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

விபத்தில் சிக்கி மரணமடைந்த கர்ப்பிணி நாய்... நெகிழச்செய்த மருத்துவர்!

Editorial   / 2020 பெப்ரவரி 19 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

விபத்தில் சிக்கி மரணமடைந்த கர்ப்பிணி நாயின் வயிற்றில் இருந்த 5 குட்டிகளையும் கால்நடை மருத்துவர் உயிருடன் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

வேலூரில் நேற்று முன்தினம் சாலையைக் கடக்க முயன்ற கர்ப்பிணி நாய் ஒன்று விபத்தில் சிக்கியது. 

அப்போது அந்த வழியாக வந்த தண்டபாணி என்பவர் நாயை மீட்டு அருகில் இருந்த கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து சென்றார். அங்கு நாய்க்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும் சிகிச்சை பலனின்றி அந்த நாய் இறந்து போனது. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட மருத்துவர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அந்த நாயின் வயிற்றில் இருந்த 5 குட்டிகளையும் உயிருடன் மீட்டார். 

அருகில் இருந்த கடையில் இருந்து பால் பாட்டில் வாங்கி வந்து அந்த குட்டிகளுக்கு பால் புகட்டப்பட்டது.

இதையடுத்து நாயை மருத்துவமனைக்கு எடுத்து வந்த தண்டபாணி என்பவரே அந்த 5 குட்டிகளையும் தன்னுடைய வீட்டிற்கு எடுத்து சென்று பராமரித்து வருகிறார். இந்த செயல் அப்பகுதி மக்களை நெகிழ வைத்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X