2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

வன்புணர்வு செய்தவருக்கு ‘பேகர் ‘ வழங்குமாறு தீர்ப்பு

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 09 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் மனைவியைப்  பாலியல் வன்புணர்வு செய்தமை, சட்ட விரோதமாக அவரைப் பின்தொடர்ந்தமை மற்றும் மிரட்டல் விடுத்தமை  ஆகிய குற்றங்ளுக்காக டெல்லியை சேர்ந்த உணவகமொன்றின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 இவ்  வழக்கு, டெல்லி உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி ஜஸ்மீட் சிங் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், ‘குற்றஞ்சாட்டப்பட்டவரும், வழக்கு தொடர்ந்தபெண்ணும், கணவன்-மனைவி என்றும், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாகவே  பிரிந்து வாழ்கின்றனர் எனவும், தற்போது முழு மனதோடு இப்பிரச்சனையில் இருந்து  சமாதானமாகப்  போவதாக  அறிவித்துள்ளனர் எனவும், இதனால் இவ்  வழக்கு  ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வழக்கானது 2020ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருவதால் நீதிமன்றத்தின் நேரத்தையும், பொலிஸாரின் நேரத்தையும் வீணடித்த காரணத்திற்காக இரண்டு ஆதரவற்ற இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு (குறைந்தபட்சம் 100 பேருக்கு) நல்ல சுத்தமான இடத்தில் வைத்து தயாரான பர்கர்களை வழங்க வேண்டும் எனவும்,  குறித்த பெண்ணுக்கு  4.5 லட்சம் ரூபாயை வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .