Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை
Editorial / 2021 ஒக்டோபர் 03 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமூக வலைத்தளங்களில் பிரபலமாக மாறுவதற்காகப் பலரும் பல வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்படியொரு முயற்சியாக இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒருவர் யாருமே செய்யாத ஒன்றைச் செய்து, பலரின் புருவங்களை உயர்த்த வைத்துள்ளார்.
இந்தோனேசியாவைச் சேர்ந்த கொய்ருல் அனம் என்ற நபர் கடந்த தனது வீட்டில் தான் பயன்படுத்தும் குக்கரைத் திருமணம் செய்துகொண்டார்.
இந்தோனேசியாவின் பாரம்பரிய திருமண உடை அணிந்திருப்பதோடு அவரது குக்கருக்கும் மணப்பெண்ணைப் போல அலங்காரம் செய்யப்பட்டு, முக்காடு ஒன்றையும் அணிவித்திருந்தார். அவரது அருகில் குக்கரை வைத்தபடி, புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட கொய்ருல் அனல், தனது குக்கரைத் திருமணம் செய்வதற்காக தானும் தனது குக்கரும் ஒப்புதல் கையொப்பம் இடுவதாகப் படங்களைச் சேர்த்துள்ளதோடு, திருமணம் முடிந்தவுடன் குக்கரை முத்தமிட்டு கூடுதலாக லைக்ஸ் அள்ளியுள்ளார்.
தனது குக்கர் வெள்ளையாக இருப்பதாகவும், தனக்குக் கீழ்ப்படிவதாகவும் குறிப்பிட்டுள்ள கொய்ருல் அனம், `நீ இல்லாமல் எனது உணவு உண்பதற்குத் தயாராவதில்லை' என்றும் தனது குக்கர் மீதான தனது `காதலை' வெளிப்படுத்தியுள்ளார்.
கொய்ருல் அனமுக்கும் அவரது குக்கருக்கும் திருமணம் முடிந்த நான்கு நாள்களுக்குப் பிறகு, தனது பேஸ்புக் பக்கத்தில் தனது குக்கரை விவாகரத்து செய்துள்ளதாகப் பதிவிட்டுள்ளார்.
அதற்குக் காரணமாகத் தனது குக்கரால் வெறும் அரிசியை மட்டும் தான் சமைக்க முடிவதாகத் தெரிவித்துள்ளார் அவர். கொய்ருல் அனமின் திருமணப் பதிவுகள் வைரலானது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago
8 hours ago