2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

முதலைக்கு இறுதி அஞ்சலி செலுத்திய மக்கள்

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 13 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரளாவின் காசர்கோடு பகுதியில்,  இறந்த முதலையொன்றுக்கு, அப்பகுதி மக்கள் இறுதி அஞ்சலி செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு அனந்தபுர பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள குளத்தில் `பபியா` என்ற முதலை சுமார் 70 ஆண்டுகாலமாக வாழ்ந்து வந்துள்ளது.

இம்முதலையானது அக்கோவிலின் அனைத்து இடங்களிலும் சுற்றித் திரிந்துள்ளதாகவும் , எனினும் இதுவரை யாரையும் தாக்கியது இல்லை எனவும் கூறப்படுகின்றது,

அத்துடன் இத்தனை ஆண்டுகளாகவும் பபியா கோவில் பிரசாதத்தை மாத்திரமே உண்டு வாழ்ந்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பபியா உடல் நலம் குன்றிக் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து மங்களூரு பிலிகுலா உயிரியல் பூங்காவின் கால்நடை மருத்துவர்களின் மேற்பார்வையில் அம்முதலைக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

எனினும் நேற்று முன்தினம் பபியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதனையடுத்து ஊர் மக்கள் அனைவரும் கூடி பபியாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இவ் இறுதி அஞ்சலியில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .