2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

மின்விசிறிகளாக மாறிய தங்க நகைகள்!

Editorial   / 2021 ஏப்ரல் 28 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா: தமிழக்தில் அண்மைக்காலமாகக்  கொரோனாத் தொற்றுப் பரவலானது தீவிரமடைந்து வருகின்றது.

இந் நிலையில் தடுப்பூசி செலுத்த வந்த இளம் தம்பதியொன்று  கொரோனா நோயாளிகளுக்காக தங்களது நகைகளை அடகு வைத்து மின்விசிறிகளை வாங்கி கொடுத்த சம்பவம் கோவையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ராம் நகர் வசித்து வரும் குறித்த  இளம் தம்பதி அதேபகுதியில் ஒரு சிறிய கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இந் நிலையில் இருவரும் நேற்றுக் காலை அருகிலுள்ள வைத்தியசாலையொன்றில் கொரோனா தடுப்பூசியினை செலுத்திக்கொள்ளச் சென்றுள்ளனர்.

இதன் போது கொரோனா சிகிச்சைப்பிரிவில் ஏசி பயன்படுத்த இயலாத நிலையில் கோடை வெயிலின் தாக்கத்தால் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாவதை அறிந்த தம்பதி,  கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக மின்விசிறிகள் வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து மின்விசிறிகளை பெற வந்த வைத்தியசாலை அதிகாரிக்கு  அதிர்ச்சி காத்திருந்தது‌. லொறி  முழுவதும் மின்விசிறிகள் அடுக்கி வைத்து இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து தம்பதியிடம் விசாரித்துள்ளார்.

அப்போது இருவரும் தாங்கள் அணிந்திருந்த தங்க நகைகளை அடகு வைத்து 2.5 லட்சம் ரூபா( இந்திய மதிப்பில்) ‌ கொரோனா நோயாளிகளுக்காக 100 மின்விசிறிகள் வாங்கி வந்திருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து மிகவும் சிரமப்பட்டு இவ்வளவு மின்விசிறிகள் வழங்க வேண்டாம் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேலுள்ள மின் விசிறிகளை திரும்பக் கொடுத்து உங்களுடைய நகையை மீட்டு கொள்ளுங்கள்  என குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

எனினும் இதனை ஏற்க மறுத்த தம்பதியினர் .”மின் விசிறிகள் கொரோனா நோயாளிகளுக்காக வாங்கி வரப்பட்டது எனவே அவர்களுக்கு இது சென்றடைய வேண்டும் எனத் தெரிவித்ததோடு தங்களுடைய விபரம் ஏதுவும் வெளியில்  தெரிய வேண்டாமென  அன்புக் கட்டளையிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X