2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

மனித முகத்துடன் அதிசய மீன்!

A.P.Mathan   / 2010 ஜூலை 09 , மு.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகில் நாம் எதிர்பார்க்காத பல விடயங்கள் நடைபெறுகின்றன. பல அதிசய தகவல்களையும் நாம் அன்றாடம் கேள்விப்படுகிறோம். அப்படியொரு அதிசய தகவல்தான் இதுவும். பிரித்தானியாவின் டெஹன்ஹாம் பிராந்தியத்தின் எஸ்ஸெக்ஸ் பகுதியில் மனித தலையுடன் அதிசய மீன் ஒன்று இனம்காணப்பட்டிருக்கிறது.

அங்கு  பண்ணையில் வேலைசெய்கின்ற விவசாயி ஒருவர் ஆசையாக வளர்ப்பதற்காக 5 மாதங்களுக்கு முன்பு இந்த மீனினை வாங்கியிருக்கின்றார். அப்பொழுது அந்த மீன் சாதாரணமாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் இப்பொழுது மனித அவசயங்கள் அந்த மீனில் தோன்றியிருப்பதை கண்டு மக்கள் வியக்கின்றனர். சோகத்துடன் இருக்கின்ற மனிதன்போல் அந்த மீனின் முகம் தோற்றமளிக்கிறது. இம்மீனை பல லட்சங்களைக் கொட்டி வாங்குவதற்கு பலர் தயாராகி வருவதாகவும் அவ்விவசாயி மேலும் குறிப்பிடுகிறார்.

You May Also Like

  Comments - 0

  • kuyang kung Saturday, 23 March 2013 02:58 PM

    ஹா ஹா

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .