2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

மனநலக் காப்பகத்தில் மலர்ந்த காதல்

Ilango Bharathy   / 2022 நவம்பர் 02 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கீழ்பாக்கம் மன நலக் காப்பகத்திற்குச் சிகிச்சைக்காக வந்த இருவர் காதலித்து திருமணம் செய்துகொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 சென்னையைச் சேர்ந்தவர்  மகேந்திரன். 42 வயதான இவர் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக, ‘இருமுனையப் பிறழ்வு (Bipolar Affective Disorder) எனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதன் காரணமாக மன நல சிகிச்சைக்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்  கீழ்பாக்கம் மன நல காப்பகத்திற்குச் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார்.

அதே காப்பகத்திற்கு மன அழுத்ததுக்கான சிகிச்சை பெறுவதற்காக  தீபா என்பவர் வந்துள்ளார். நாளடைவில் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப்போகவே, அது காதலாக மாறியுள்ளது.

அதேசமயம் இருவரும் பூரண குணமடைந்த நிலையில் திருமணம் செய்துகொள்ளவும் தீர்மானித்துள்ளனர்.

தீபாவை முதன்முதலில் பார்த்தபோது மகேந்திரனுக்கு அவரது அம்மாவை போல தோன்றியதாகவும்,அவருடன் பேசிப் பழகியதில் அவர் ஆசிரியர் என்பது தெரியவந்ததாகவும், தனது தாயாரும் ஆசிரியர் என்பதால் தீபாவை மிகவும் பிடித்துப் போனதாகவும், தனது வாழ்க்கையில் உள்ள அனைத்து உறவுகளும் தீபாவின் உருவத்தில் தனக்கு கிடைத்துள்ளன எனவும் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அதே சமயம்"என் வாழ்க்கையில் எனக்கு திருமணம் நடக்கும் என்று நான் நினைக்கவில்லை" இது அதிசயமாக உள்ளது என தீபா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் இவர்களது திருமணம் கடந்த 28 ஆம் திகதி

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் அதே மனநலக் காப்பக வளாகத்தில் உள்ள கோவிலில் இடம்பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .