Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2021 ஏப்ரல் 26 , பி.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த சரத்மோன் என்பவருக்கு அபிராமி என்ற இளம்பெண்ணுக்கும் 2021 ஏப்ரல் 25ஆம் திகதி திருமணம் செய்வதற்கு கடந்த ஆண்டே பெற்றோர் முடிவு செய்திருந்தனர்.
ஆனால், சரத்மோன் மற்றும் அவரது தாயார் ஜிஜிமொல் ஆகிய இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில், சரத்மோன் மற்றும் அபிராமிக்கு திட்டமிட்ட நாளில் (ஏப்ரல் 25) திருமணம் செய்ய வேண்டுமென அவர்களது குடும்பத்தினர் உறுதியாக இருந்தனர்.
குடும்பத்தினரின் வேண்டுகோளையடுத்து, சரத்மோன் - அபிராமி தம்பதியினர் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திருமணம் செய்துகொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.
கொரோனா பாதிப்பில் இருந்து சரத்மோன் குணமடைந்த பின்னர் சரத்மோன் - அபிராமி தம்பதியர் தங்கள் இல்லற வாழ்வை தொடங்குவார்கள் என புதுமண தம்பதியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago