2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

பூமியை நோக்கி வேகமாக வரும் இராட்சத கோள்

Editorial   / 2019 ஜூலை 11 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூமியை நோக்கி இராட்சத கோள் ஒன்று 2,700 மெகா டொன் அழிவு சக்தியுடன் வேகமாக வந்து கொண்டிருப்பதாக நாசா அறிவித்துள்ளது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் இந்த இராட்சத கோளுக்கு Asteroid FT3 என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.

இந்த கோள் சுமார் 1,115 அடி மற்றும் 340 மீற்றர் விட்டம் கொண்ட பாறையால் ஆனது என்று நாசா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாசா கணித்துள்ள கணிப்பின் படி 2019 ஆண்டு முதல் 2,116 ஆம் ஆண்டு வரை சுமார் 165 சிறுகோள்கள் தாக்குதலைப் பூமி சந்திக்க போகிறது என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளது.

Asteroid FT3 என்று அழைக்கப்படும் இந்த கோள் எதிர்வரும் ஒக்டோபர் 3ஆம் திகதி பூமியை நோக்கி அல்லது பூமியைத் தாண்டி செல்லும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளது போல, இந்த கோள் பூமிக்கு அருகில் கடந்து சென்றால் பூமிக்கு ஏற்படும் பேரழிவு மற்றும் ஆபத்து குறைவானது.

எனினும், இக்கோள் தற்பொழுது வந்து கொண்டிருக்கும் பாதையில் மாற்றம் ஏற்பட்டு பூமிக்கு நேராக வந்தால், முடிவுகள் பேரழிவை தரும் என்பதில் சந்தேகமில்லை என்று நாசா கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X