2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

பூச்சியை அடித்ததால் பார்வை இழந்த நபர்

Freelancer   / 2024 ஜூலை 28 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது முகத்தை வட்டமிட்டு தொந்தரவு செய்த பூச்சியை அடித்ததால், தனது இடது கண் பார்வையை இழந்துள்ளார் சீனாவைச் சேர்ந்த ஒருவர்.

சீனாவின் தெற்கு மாகாணமான குவாங்டாங்கில் உள்ள ஷென்சென் நகரில் வசித்து வரும் வூ என்பவரின் முகத்தில், பூச்சி ஒன்று வெகுநேரமாக வட்டமிட்டபடி தொந்தரவு செய்துள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த அவர், தனது இடது கண்ணின் மீது அமர்ந்த பூச்சியை பலமாக அடிக்கவே, அவரின் இடது கண்ணில் அடி பலமாக விழுந்துள்ளது.

இதனையடுத்து, சில மணி நேரத்திற்கு பிறகு கண்களில் வலி ஏற்பட்டு, கண்கள் சிவக்க ஆரம்பித்துள்ளது. இதனால், அச்சமடைந்த அவர், உடனடியாக மருத்துவரை அணுகியுள்ளார். அங்கு இவரை சோதனை செய்த மருத்துவர்கள், இவர், கான் ‘ஜூன்க்டிவிடிஸ்’ எனும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மருத்துகளை உட்கொள்ள ஆரம்பித்துள்ளார். ஆனால், அது அவரின் நோயை கட்டுப்படுத்தவில்லை.

இதனால், அவரின் கண்களை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான புண் ஏற்பட்டுள்ளது. மீண்டும் மருந்துகள் எடுத்தபோதும் கூட அதை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு, தொற்று அதிகரித்து கண்பார்வை திறன் குறைய தொடங்கியுள்ளது.

இதே நிலை தொடர்ந்தால், இது மூளையையே பாதிக்கும் என்பதால் மருத்துவர்கள் அவரது இடது கண்ணின் கரு விழியையே அகற்றியுள்ளனர்.

மேலும், இவரை கடித்த வடிகால் ஈ (dry fly) பூச்சியாலேயே இந்த தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவை பொதுவாக குளியலறை, குளியல் தொட்டிகள், சமையலறை போன்று வீடுகளில் உள்ள இருண்ட மற்றும் ஈரமான பகுதிகளில் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X