Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 24, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 10 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனிதர்களில் ஏற்படக்கூடிய அனைத்து வகையான புற்றுநோய்களையும் ஒரே ஒரு நிமிடத்துக்குள் கண்டுபிடிக்கக்கூடிய முறை ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
பரம்பரை அலகை அடிப்படையாகக் கொண்டே இப்பரிசோதனை மேற்கொள்ளப்படுவதோடு, இந்த ஆய்வுக்காக நோயாளியின் மீது காணப்படும் கட்டியிலிருந்து இழையம் ஒன்று பெறப்படும்.
எனினும் இதுவரை மனிதர்களில் இச்சோதனை பரிசோதிக்கப்படவில்லை. தற்போது எலிகளில் இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இப்பரிசோதனையை மேற்கொள்ளக்கூடிய சாதனம் ஒன்றையும் உருவாக்குவதற்கு குறித்த விஞ்ஞானிகள் குழு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இதுவரை சுமார் 200 வரையான இழையங்களையும் இரத்த மாதிரிகளையும் இதே முறையில் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். ஆய்வானது 90 சதவீதம் வெற்றிகரமாக இடம்பெற்றது எனவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
40 minute ago
5 hours ago