2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

பாம்பை வைத்து இளைஞர் செய்த காரியம்... வைரலாகும் வீடியோ

J.A. George   / 2021 டிசெம்பர் 21 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளைஞர் ஒருவர் பாம்பை வைத்து ஸ்கிப்பிங் செய்யும் வீடியோ வெளியாகி சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி வருகின்றது.

ஸ்கிப்பிங் விளையாட கயிற்றை பயன்படுத்துவார்கள். ஆனால் அண்மையில் ஒருவர் ஒரு பெரிய பாம்பை எடுத்து ஸ்கிப்பிங் விளையாடிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில் குப்பை கொட்டும் பகுதியில் இருந்த பாம்பை ஒரு இளைஞர் தனது இரண்டு கைகளால் பிடித்து ஸ்கிப்பிங் விளையாடுகின்றார். பின்னர் அதை அதை தூக்கி போட குப்பை இருக்கும் பகுதிக்குள் செல்கிறார். 

இந்த சம்பவம் மும்பையை அடுத்த பால்கர் என்ற பகுதியில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. பின்னர் இது குறித்து விசாரித்த போது அவர் செத்து போன பாம்பை எடுத்து தான் ஸ்கிப்பிங் விளையாடியுள்ளார். என்பது தெரியவந்தது.

இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இருந்தாலும், இளைஞரின் இந்த செயலுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X