Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 17, வியாழக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
'சேவ் எலிபன்ட்' (Save Elephant) என்ற அமைப்பு வெளியிட்ட யானையொன்றின் புகைப்படம் இலங்கையை ஏன் உலகின் கவனத்தையே ஈர்த்துள்ளது எனலாம்.
மனிதாபிமனற்ற உலகில் வாழ்கிறோம் என்பதற்கு, இந்த யானை சிறந்ததோர் உதாரணம். 'டிக்கிரி' என பெயர்கொண்டு அழைக்கப்படும் இந்த யானை, இலங்கையின் வரலாற்றுப் புகழ்மிக்க கண்டி எசல பெரஹெரா ஊர்வலத்தில் ஒவ்வொரு வருடமும் பங்கேற்று வருகிறது.
பெரஹெராவில் கலந்துகொள்ளும் யானைகளில் 70 வயதான ‘டிக்கிரி’யும் ஒன்று. இந்த டிக்கிரியின் புகைப்படத்தை ‘சேவ் எலிபன்ட்’ அமைப்பு பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது. அந்தப் புகைப்படத்தில் யானை எலும்பும் தோலுமாக உள்ளது. இந்த யானையின் புகைப்படத்தைப் பார்த்து அனைவரும் அதிர்ந்தனர்.
இந்த ‘டிக்கிரி’ பற்றிக் குறிப்பிட்டுள்ள ‘சேவ் எலிபன்ட்’ அறக்கட்டளை, “டிக்கிரிக்கு உடல்நிலை சரியில்லை. பெரஹெரா ஊர்வலம் தொடங்கும்போது அதாவது மாலை நேரத்தில் பேரணியில் இணையும் டிக்கிரி நள்ளிரவில்தான் மீண்டும் தன் இடத்துக்குத் திரும்புகிறது. எலும்பும், தோலுமாக உள்ள டிக்கிரியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மக்களின் கூச்சல், புகை, பட்டாசு போன்றவற்றுக்கு நடுவே அதை அழைத்துச் செல்கின்றனர். அதனால், டிக்கிரி மிகவும் கஷ்டப்படுகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago