Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 மே 29 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவில், விமானத்தில் பயணி ஒருவர் உள்ளே நிர்வாணமாக ஓடியதால் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
அஸ்திரேலியாவில் நேற்று இரவு விர்ஜின் அவுஸ்திரேலிய நிறுவனத்தின் விமானம் ஒன்று, பெர்த்தில் இருந்து மெல்போர்னுக்கு 3.30 மணி நேர பயணமாக புறப்பட்டுள்ளது. அப்போது, விமானம் கிளம்பிய சற்றுநேரத்தில், பயணி ஒருவர் விமானத்தின் உள்ளே நிர்வாணமாக ஓடியுள்ள நிலையில், விமானத்தைத் தரையிறக்குமாறு கூறி, விமான பணிப்பெண்ணை கீழே தள்ளிவிட்டுள்ளார். இதனால், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தால் பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
அதேநேரத்தில், இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், விமானம் பெர்த்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த நபர் விமான நிலைய காவலர்களால் கைது செய்யப்பட்டார் என்றும், சோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அறியவருகின்றது.
இந்நிலையில், விமான நிறுவனமும், காவல் துறையினரும் இந்த சம்பவத்திற்கானக் காரணத்தைத் தெரிவிக்கவில்லை. எனினும், இவ்விவகாரம் தொடர்பாக விமான நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
35 minute ago
35 minute ago
42 minute ago