Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 17, வியாழக்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமூகவலைதள காதலில் முகம் தெரியாத நபர் என்று கூறிவிட முடியாது. பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டா போன்ற பலவற்றில் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட காதல் சம்பவம் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பவித்ரா என்ற இளம் பெண் பவித்ரா. 23 வயதான இவர் டி.பார்ம் படித்துக் கொண்டிருந்தார். அப்போது, பேஸ்புக்கில் விக்னேஷ்வரன் என்ற இளைஞரோடு நட்பாகியுள்ளார்.
இவர் பி.சி.ஏ. பட்டப்படிப்பு படித்துவிட்டு வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
விக்னேஷ்வரன் தனது பொழுதுபோக்கிற்காகவும், தொழிலை விரிவுபடுத்தவும் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி பயன்படுத்தியுள்ளார்.
அப்போது தான் பவித்ரா என்ற பெண்ணுடன் நட்பு கிடைத்துள்ளது. இருவரும் நண்பர்களாக தான் பேசத் தொடங்கியுள்ளனர். ஆனால் காலப்போக்கில் அது காதலாக மாறியுள்ளது.
காதல் வளரத் தொடங்கிய அந்த சமயத்தில் தான், விக்னேஷ்வரன் தனது விவரம் குறித்து தெரிவித்துள்ளார். அதில் விக்னேஷ்வரன் சுமார் 4 அடி மட்டுமே உயரம் கொண்டவர் என்பது பவித்ராவுக்கு தெரியவந்துள்ளது.
இதற்கான பதில் என்னவாக இருக்கும் என்று விக்னேஷ்வரன் எதிர்பார்த்த நேரத்தில், பவித்ரா அது குறித்து சிறிதும் தயக்கம் கொள்ளாமல், நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம் இதற்கு மேல் என்ன இருக்கிறது, நீங்கள் தான் என்னுடைய வாழ்க்கைத் துணை என கூறியுள்ளார்.
பவித்ரா தனது உன்னதமான காதலை தெரிவுப்படுத்திய பின், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அப்போது தான் பிரச்சனை ஆரம்பமாக தொடங்கியுள்ளது. பவித்ரா தனது காதல் குறித்து வீட்டில் தெரிவித்துள்ளார்.
அப்போது பவித்ரா காதலிக்கும் காதலனை பார்த்து பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து திகைத்துள்ளனர்.
உடனடியாக விக்னேஷ்வரனுக்கு எள்ளளவும் நீ பொருத்தம் இல்லை என்றும் உங்கள் காதலை சுத்தமாக ஏற்க முடியாது என்றும் அவரை மறந்து விடு என வற்புறுத்த தொடங்கியுள்ளார்கள்.
இந்த நிலையில் காதல் ஜோடிகள், மனதால் இணைந்த நம்மை எவராலும் பிரிக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்துள்ளார்கள். இதையடுத்து பவித்ரா அதிரடி முடிவெடுத்து தங்களது பெற்றார் மற்றும் உறவினர்களை உதறி தள்ளிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.
அதன்பின் கரூரில் உள்ள பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நண்பர்கள் மற்றும் விக்னேஷ்வரனின் உறவினர்கள் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
இது ஒருபுறம் இருக்க பெண்ணின் வீட்டார் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு அவர்கள் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு புகார் அளித்துள்ளனர்.
அதன்பின் காதல் ஜோடியின் பெற்றோர்களை வரவழைத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பவித்ரா காதல் திருமணத்தில் உறுதியாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து பவித்ரா வீட்டார் இந்த திருமணத்தை ஏற்க மறுத்து என் மகளே எங்களுக்கு வேண்டாம் என கூறி சென்றுள்ளனர்.
அதன்பின் விக்னேஷ்வரின் குடும்பம் இந்த காதல் திருமணத்தை ஏற்றுக் கொண்டு, தங்களது வாழ்க்கையை தொடங்க சென்றுவிட்டனர்.
கதாநாயகர்கள், கதாநாயகியோடு ஒப்பிட்டு தங்களது காதலை ஆரம்பிக்கும் இந்த காலக்கட்டத்தில் இதுபோன்ற ஒரு சில நிகழ்வுகளே காதல் என்ற வார்த்தையை உயிர்பிக்கும் விதமாக இருக்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
57 minute ago
1 hours ago