Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை
Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 11 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரேஸிலைச் சேர்ந்த பிரபல மொடல் நடிகையொருவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
கிரிஸ் கேலரா (Cris Galera) என்ற 33 வயதான மொடல் நடிகையே இவ்வாறு திருமணம் செய்து கொண்டுள்ளார். கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்ற இத் திருமணத்திற்கு அவரது நெருங்கிய நண்பர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
கிரிஸ் கேலரா தனது கடந்த காலங்களில் ஏற்பட்ட உறவு முறிவுகளால் விரக்தி அடைந்து இனி தனியாக வாழலாம் என்று தீர்மானித்து இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது முடிவை பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சித்தனர்.
இதற்கு, “ என்னை மற்றவர்களிடம் நிரூபிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. நான் அவர்களின் கருத்துகளை பார்ப்பதில்லை” என்று பதிலளித்திருக்கிறார்.
முன்னதாக 2020 ஆம் ஆண்டு பட்ரிசியா கிறிஸ்டின் என்ற பெண் தன்னை தானே திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
7 hours ago
8 hours ago
06 Apr 2025