2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

‘ தந்தையர் தினத்தை தந்தையுடன் கொண்டாடியதில் மகிழ்ச்சி’

Ilango Bharathy   / 2021 ஜூன் 22 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனாத் தொற்றுக் காரணமாக, தீவிர சிகிச்சைப்பிரிவில் 172 நாட்களாக உயிருக்குப்போராடிய குடும்பஸ்தர் ஒருவர் உயிர் பிழைத்த சம்பவமொன்று ஸ்கொட்லாந்தில் இடம்பெற்றுள்ளது.

பிரயன்  மியர்ன்ஸ் (Brian Mearns) என்னும் 64 வயதுடைய  குடும்பஸ்தரே இவ்வாறு கொரோனாத்   தொற்றினால் நீண்டகாலமாக உயிருக்குப் போராடியுள்ளார் எனவும், அவர் நான்கு முறைகள் மரணத்தின் விளிம்பிலிருந்து மீண்டுள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவருடைய மகள்களான லியா, மற்றும் நிக்கொலா ஆகியோர் இதுபற்றி கூறுகையில் ”எமது தந்தை உயிர் பிழைத்தது ஓர் அதிசயம். அவருடன் சேர்ந்து  தந்தையர் தினத்தை மகழ்ச்சியுடன் கொண்டாடும் அதிர்ஸ்டசாலிகள் நாங்கள்” எனத் தெரிவித்தனர்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரயன் ”என் குடும்பத்தோடு சேர்ந்து கொண்டாடும் இந்த நாள் எனக்கு ஒரு விஷேட தினம். நான் ஒரு பெரும் அதிர்ஷ்டசாலி என்று உணர்கிறேன். நான் மருத்துவமனையில் இருந்தபோது  பலரது உடல்கள் சடலங்களாக வெளியில் அனுப்பப்படுவதைக் கண்டேன் "எனத் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X