2024 டிசெம்பர் 24, செவ்வாய்க்கிழமை

சுயமாக சக்தியைப் பிறப்பிக்கும் கலங்களை உருவாக்கி சாதனை

Editorial   / 2019 ஏப்ரல் 08 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒளித்தொகுப்பினூடாக இரசாயன சக்தியை பிறப்பிக்கக்கூடிய கலத்தை செயற்கை முறையில் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதித்துள்ளனர்.

இக்கலங்கள் முற்றிலும் இயற்கையான கலங்களை ஒத்த கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதனை ஜப்பானில் உள்ள டோக்கியோ தொழில்நுட்ப நிறுவன ஆராய்ச்சியாளர்களே உருவாக்கியுள்ளனர்.

இக்குழுவுக்கு தலைமை தாங்கிய Yutetsu Kuruma என்பவர் கருத்து தெரிவிக்கையில், தான் முதலில் மென்சவ்வுகளில் காணப்படும் கலங்கள் போன்று உயிருள்ள செயற்கை கலங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையிலேயே தற்போது சுயமாக சக்தியை பிறப்பிக்கக்கூடிய இக்கலம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இப் புதிய கலமானது இலிப்பிட் மேற்படையைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X