2025 ஜனவரி 29, புதன்கிழமை

சிறுத்தையை விரட்டி அடித்த வளர்ப்பு நாய்கள்

Freelancer   / 2024 ஓகஸ்ட் 01 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தரகாண்டில் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தையை வளர்ப்பு நாய்கள் விரட்டி அடித்த சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு வீட்டின் வாசலில் வளர்ப்பு பிராணியான 3 நாய்கள் அமர்ந்திருக்கின்றன. அப்போது, யாரும் எதிர்பார்க்காத போது, சிறுத்தை ஒன்று உள்ளே புகுந்து, நாயை வேட்டையாட முயன்றுள்ளது.

ஆனால், சிறுத்தையிடம் இருந்து தப்பித்த நாய், அதனை திருப்பிக் கடிக்க முயன்றுள்ளது. இதனால், பீதியடைந்த சிறுத்தை அங்கிருந்து தலைதெறிக்க ஓடியுள்ளது. பின்னர், நாய்களும் சிறுத்தையை பின் தொடர்ந்து சென்று குரைக்கின்றன.

வீட்டில் என்ன நடக்கிறது என்பதை தாமதமாக உணர்ந்த வீட்டு உரிமையாளர், பீதியுடன் வீட்டு வாசல் பக்கம் வந்து எட்டிப் பார்க்கின்றார். பின்னர், சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்த போது, சிறுத்தை வந்து சென்றதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த காணொளி இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.S

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .