Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
Editorial / 2023 ஜூன் 20 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈகுவேடார் நாட்டில் வசித்து வந்தவர் பெல்லா மொன்டோயா (76). கடந்த 9-ம் திகதி அந்த மூதாட்டி உயிரிழந்து விட்டார் என அறிவிக்கப்பட்டது. இதுபற்றி கடந்த வாரம் வெளி வந்த வீடியோ ஒன்றில், சவ பெட்டிக்குள் பெல்லா மூச்சிறைப்புடன் காணப்படுகிறார். அவருக்கு 2 ஆண்கள் உதவி செய்கின்ற காட்சிகள் வெளிவந்தன.
இது குறித்து பெல்லாவின் மகன் கில்பர்ட் பார்பெரா கூறும் போது, சவ பெட்டியின் உள்ளே இருந்து கொண்டு அவர் அதனை பலம் கொண்டு தட்டினார். ஆனால் அவரால் வெளியே வர முடியவில்லை. ஏனென்றால், அவருடைய உறவினர்கள் வருத்தத்தில் இருந்தனர் என கூறியுள்ளார். இந்த விவகாரத்தில், மூதாட்டி பெல்லா உயிரிழந்து விட்டார் என தவறுதலாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சவ பெட்டியில் இருந்து மீட்கப்பட்ட பெல்லா, பாபாஹோயோ நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதன்பின் அவர், தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில், ஸ்டிரோக் பாதிப்பு ஏற்பட்டு கடந்த வெள்ளிக் கிழமை அவர் உயிரிழந்தார். இதனை மண்டல சுகாதார துறை தெரிவித்து உள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சகம் விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
5 hours ago
8 hours ago