Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகிலே அதிகூடிய எடையுடையவர் என வர்ணிக்கப்படும் 960 இறாத்தல் நிறையுடைய நபருக்கு அண்மையில் எடையை குறைப்பதற்கான சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மெக்சிகோ, ஒப்ரிகோன் நகரில் வசித்து வருபவரான என்டிரிஸ் மொரினோ என்ற 37 வயதுடைய நபர், அசுர வேகத்தில் வளர்ந்த தனது உடல் நிறைக்காரணமாக பல்வேறு துன்பங்களை எதிர்கொண்டு வருகின்றார்.
இதனை கருத்திற்கொண்டு அவருக்கு உடல் எடையை குறைப்பதற்கான சிகிச்சையை மேற்கொள்வதற்கு வைத்தியர்கள் முன்வந்தனர். அதிக எடைக்காரணமாக இயல்பாக நடக்கும் ஆற்றலை இழந்த அவர், தனக்கெனவே தயாரிக்கப்பட்ட ஸ்டெச்சரிலே வளம் வருகிறார்.
இந்நிலையில் இவருக்கு, 7 மருத்துவர்கள் இணைந்து உடல் எடை குறைப்பு சத்திரசிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.
இவருக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையானது உண்மையில் சவால் மிக்கது என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு முன்னர் 1400 இறாத்தல் எடையுடைய ஒருவர், அமொரிக்காவின் சியாட்டில் பல்கலைகழகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு 13 பேரை கொண்ட மருத்துவர் குழு சிகிச்சையை மேற்கொண்டனர். இவர், ஒருநாளைக்கு 1200 கலோரி நிறையுடைய உணவை உட்கொள்வாராம்.
இவர் தனது 41 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். உயிரிழக்கும்போது அவரது எடை 798 இறாத்தலாக குறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
21 Apr 2025
21 Apr 2025