Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Editorial / 2022 நவம்பர் 13 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸைச் சேர்ந்த பெண் ஒருவரின் கையில், மூக்கை வளர்த்து அதனை வெற்றிகரமாக அவரது முகத்தில் பொருத்தி வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கடந்த 2013ஆம் ஆண்டு குறித்த பெண் தனது மூக்கில் ஏற்பட்ட புற்று நோய் காரணமாக சிகிச்சையொன்றை மேற்கொண்டார்.
ரேடியேஷன் தெரெபி மற்றும் ஹீமோ தெரபி மூலம் அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவர் அவரது மூக்கின் பெரும் பகுதியை இழக்கும் நிலை ஏற்பட்டது.
இதனால் சில வருடங்களாக அவர் பாதிக்கப்பட்டிருந்தார். இறுதியாக அவரது துன்பத்துக்கு விடுதலை கிடைத்துள்ளது.
பிரான்ஸ் நாட்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள் இந்த புதிய மைல் கல்லை எட்ட மிகுந்த சிரத்தை எடுத்துள்ளனர்.
முதலில் அவரது அறுவைசிகிச்சைக்கு முந்தையப் படங்கள் மூலம் மூக்கின் வடிவத்தைக் கண்டறிந்து அதனை 3டியில் அச்சிட்டனர். இதற்காக அவரது மூட்டிலிருந்து cartilage என்ற பொருளைப் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த மூக்கின் வடிவ அமைப்பை அவரது முழங்கையில் பொருத்தினர். அதிலிருந்து அவருக்கு தோல் மற்றும் திசுக்கள் வளர்ந்திருக்கிறது.
இரண்டு மாதங்கள் கழித்து அவரது மூக்கு அறுவை சிகிச்சை மூலம் முகத்தில் பொருத்தப்பட்டது. மேலும் மைக்ரோ அறுவை சிகிச்சைகள் மூலம் இரத்த நாளங்களைப் பொருத்தியுள்ளனர்.
இவ் வெற்றிகரமான அறுவை சிகிச்சை உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
24 Nov 2024
24 Nov 2024