Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 03:54 - 0 - 139
இப்போதைய நியூசிலாந்து பகுதியில் சுமார் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கிளியின் உயரம் மனிதனின் உயரத்தில் பாதி இருந்தது என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறது ஓர் ஆய்வு.
அந்த காலக்கட்டத்தில் கிளி ஒரு மீட்டர் உயரத்தில் இருந்திருக்கிறது. அதாவது மூன்று அடி மூன்று அங்குலம் உயரத்தில் இருந்திருக்கிறது.
நியூசிலாந்தின் தெற்கு ஒடாகோ பகுதியில், பல மில்லியன் ஆண்டுளுக்கு முன்பு வாழ்ந்த அந்தக் கிளியின் சிதிலங்கள் கிடைத்துள்ளன. இந்தக் கிளியின் எடையை கருத்தில் கொண்டால், இந்த கிளி மாமிச உண்ணியாகவும், பறக்கும் திறனற்றதாகவும் இருந்திருக்கிறது.
இந்தப் பறவை குறித்த ஆய்வின் முடிவானது பயாலஜி லெட்டர்ஸ் எனும் அறிவியல் சஞ்சிகையில் பிரசுரமாகி உள்ளது. ஏழு கிலோ எடைக்கு மேல் இந்தப் பறவை இருந்திருக்கிறது.
“இதைவிட பெரிய கிளிகள் இந்த உலகத்தில் இல்லை,” என்கிறார் இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய ஆஸ்திரேலிய ஃப்ளிண்டர்ஸ் பல்கலைக்கழக தொல்லுயிரியல் பேராசிரியர் ட்ரிவோர் வொர்தி. 11 ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பறவையின் எச்சங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
ட்ரிவோர் வொர்தி, “ஓர் ஆய்வின் போது தற்செயலாக எனது மாணவர் ஒருவர் இந்த கிளியின் எலும்புகளை கண்டுபிடித்தார்.” என்கிறார்.
இந்தப் பறவையின் அலகு மிகப் பெரிதாக இருந்திருக்கிறது என்கிறார் என் எஸ் டபிள்யூ பல்கலைக்கழகத்தை சேர்ந்த மைக்.
இந்தப் கிளிகள் நன்கு உணவு உட்கொண்டுள்ளன. ஏன் மற்ற கிளிகளை கூட இவை உணவாக உண்டு இருக்கலாம் என்கிறார் அவர்.
இவ்வளவு பெரிய பறவைகளை கண்டுபிடிப்பது நியூசிலாந்தில் புதிதல்ல. அழிந்து போன பறவை இனமான மோவாவின் வாழ்விடமாக ஒரு காலத்தில் நியூசிலாந்து இருந்திருக்கிறது. இந்தப் பறவையின் உயரம் ஏறத்தாழ 3.6 மீட்டர். அதாவது 11 அடி 8 அங்குலம் ஆகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
8 hours ago
8 hours ago