Editorial / 2018 மே 02 , பி.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் ஜாக்கி ஜானின் மகள், இருக்க இடம் இல்லாமல், சாலையோரம் படுத்து உறங்குவதாகக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் ஜாக்கிஜான் 1998ஆம் ஆண்டு, ‘மிஸ் ஆசியா’ அழகிப் பட்டம் வென்ற எலைன் இ லீ என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார். அதன் காரணமாக எட்டா சோக் லாம் (18) என்ற மகள் பிறந்தார். தனது கள்ளத்தொடர்பை ஜாக்கிஜான் பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்.
இதேவேளை, தன்னுடன் வசித்த வந்த தன் மகள் எட்டாவை காணவில்லை என்று, அவரது தாய் எலைன் கடந்த பெப்ரவரி மாதம் போலிஸில் புகார் அளித்தார். இந்நிலையில் எட்டா, தன் ஓரினச் சேர்க்கை காதலியுடன் சேர்ந்து வீடியோ எடுத்து அதை யூடியூப்பில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “நானும், என் காதலி ஆன்டி ஆட்டமும், கையில் பணம் இல்லாமல், இருக்க இடம் இல்லாமல் ஹொங்கொங்கில் கஷ்டப்படுகிறோம். பாலத்திற்கு அடியில் எல்லாம் தூங்க வேண்டி உள்ளது. யாருமே உதவி செய்யவில்லை” என்று தெரிவித்துள்ளதோடு, “தயவு செய்து எங்களுக்கு இருக்க இடம் கொடுத்து உதவி செய்யுங்கள்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், “அரசு நடத்தும் ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்றால் என்னையும், ஆன்டியையும் பிரித்துவிடுவார்கள். ஃபேஸ்புக் நண்பர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. நான் போன் செய்தால் யாருமே எடுப்பது இல்லை. யாருமே உதவி செய்யாததால் தான் இந்த வீடியோவை வெளியிடுகிறேன். ஏனென்றால் இதற்கு மேல் என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. உண்மையாக காதலிக்கும் இருவரைப் பிரிக்க பார்க்கிறார்கள். எதற்காக என்று புரியவில்லை” என்று உருக்கமாகக் கூறியுள்ளார் எட்டா.
எட்டாவும், ஆன்டியும் 15 மாதங்களாக காதலித்து வருகிறார்கள். எட்டா, ஆசிரியையான ஆன்டி மீது காதல் வயப்பட்டு, பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இது குறித்து தாய் எலைன் கூறுகையில், “ஆன்டிக்கு 30 வயது ஆகிறது. அவர் ஒரு ஆசிரியை. அவர் எப்படி ஒரு 18 வயது சிறுமியை இப்படி வீடியோ வெளியிடச் சொல்லலாம்? இது தவறு. பணம் இல்லை என்றால் அவர்கள் வேலைக்கு செல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு எட்டாவின் தந்தையின் பெயரை இழுத்து பணம் கேட்கக் கூடாது. உலகம் முழுவதும் மக்கள் கடினமாக உழைக்கிறார்கள். பணத்துக்காக அடுத்தவர்களின் புகழை பயன்படுத்துவது இல்லை” என்று கூறியுள்ளார்.
3 hours ago
4 hours ago
7 hours ago
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago
14 Dec 2025