Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை
Editorial / 2022 ஜனவரி 31 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவரவருக்கு அடிக்கும் அதிர்ஷ்டங்களை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே முடியாது. கொரோனா காலத்தில் பலரும் பதவிகளை இழந்துவிட்டனர். இன்னும் சிலர். இருந்த பதவியை விட்டோடிவிட்டனர்.
சிலருக்கு அதிர்ஷ்டம், இன்னும் சிலருக்கு துரதிஷ்டம் என்றெல்லாம் கூறிக்கொண்டே போகலாம். வர்த்தகத்தை இழந்தவர்களும் உள்ளனர். புதுப்புது வர்த்தகங்களை தொடர்கியோரும் இருக்கின்றனர்.
ஆனால், தனது காதலியின் கட்டிலில் படுத்துக்கொண்டே, 1000 கோடி ரூபாயை சம்பாதித்த காதலன் தொடர்பிலான செய்திதான் ட்ரேடிங்காக இன்றிருக்கின்றது.
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ஜானி பவ்பார்ஹேட், இவர் ஒரு தொழிற்நுட்ப (ஐடி) ஊழியராக இருந்து வருகிறார்.
ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நேரத்தில் தன் காதலியின் வீட்டில் மாட்டிக்கொண்டார்.
அப்பொழுது அவர் சும்மா இருக்காமல் தன் காதலியின் வீட்டில், காதலியின் கட்டிலில் படுத்துக்கொண்டு ஒரு ஆப்பை டிசைன் செய்து அதற்கான கோடிங்கை எழுதினார். அந்த ஆப்பிற்கு அவர் ஹோபின் என பெயரிட்டார்.
இந்த ஆப் குறித்து அவர் 2018 ஆம் ஆண்டே திட்டமிட்டிருந்த நிலையில் அதை செய்ய நேரம் கிடைக்காமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் அவருக்கு ஊரடங்கு நேரம் கைகொடுத்ததால் அவர் அந்த ஆப்பை டிசைன் செய்து வெற்றிகரமாக முடித்தார்
அவரது அந்த ஆப்பிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இந்த ஆப்பை சுமார் 50 இலட்சம் பேர் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.
தற்போது இந்த ஆப்பின் மதிப்பு 4 டிரில்லியனுக்கும் அதிகமாக சென்றுவிட்டது. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் 113 வது பணக்காரராக ஜானி மாறிவிட்டார்.
இவர் சமீபத்தில் தனது நிறுவனத்தின் சில பங்குகளை விற்றது மூலம் சுமார் ரூ.100 கோடி பெற்றுள்ளார்.
தனது காதலியின் கட்டிலில் படுத்துக்கொண்டே கோடி கணக்கில் சம்பாதித்தது. தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
4 hours ago
5 hours ago
7 hours ago