2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

கரத்தை பிடித்துகொடுத்து கண்கலங்கிய உத்தம்

Editorial   / 2021 ஏப்ரல் 29 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நபரொருவர் தனது மனைவியை அவர் விரும்பிய காதலனுக்கு மணமுடித்து வைத்த சம்பவம் இந்தியாவின் பீகாரில் இடம்பெற்றுள்ளது.

உத்தம் மண்டல் என்ற குறித்த நபர் சப்னா குமாரி என்பவரை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இத் தம்பதிக்கு இரு பிள்ளைகள்  உள்ளனர்.

இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வந்த தன்னை விட வயது குறைந்த ராஜூ குமார் என்பவரை  சப்னா காதலித்து வந்துள்ளார் இவ்விவகாரம் உத்தமுக்கு தெரிய வரவே அதிர்ச்சி அடைந்த அவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எனினும் சப்னா தனது காதலைத் தொடர்ந்து வந்துள்ளமையால்  இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டைஏற்பட்டுள்ளது.

இதனால் விரக்தியடைந்த அவர்   இறுதியில் சப்னாவின் விருப்பம்போல் ராஜூவை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும் அருகிலுள்ள கோயில் ஒன்றில் அவர்களுடைய திருமணத்தையும்  நடத்தியுள்ளார்.

இத் திருமணமானது  உத்தம் மற்றும் சப்னாவின் குடும்பத்தினர் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது. இதன் போது தனது மனைவி வேறு யாரோ ஒருவரை திருமணம் செய்து கொள்வதனை  எண்ணி  உத்தம் கண் கலங்கியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X