Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
Nirshan Ramanujam / 2017 செப்டெம்பர் 05 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கன்றுக்குட்டியொன்று, எதிர்பாராத விதமாக இறந்ததைத் தொடர்ந்து, பெண்ணொருவரை, ணரு வாரம் பிச்சையெடுக்க, கிராம பஞ்சாயத்து தலைவர் உத்தரவிட்ட சம்பவம் பரபரப்பாகியுள்ளது.
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், பின்ட் மாவட்டம், மடடின் கிராமத்தைச் சேர்ந்தவர் கமலேஷ். கடந்த மாதம் 31ஆம் திகதி, தனது வீட்டிலிருந்த தாய்ப்பசுவிடம் நின்று கொண்டிருந்த கன்றுக்குட்டியின் கழுத்திலிருந்த கயிற்றைப் பிடித்து கமலேஷ் இழுத்தபோது, எதிர்பாராத விதமாக கயிறு, கழுத்தை இறுக்கியதில், கன்றுக்குட்டி இறந்து போனது.
இது குறித்து விசாரித்த உள்ளூர் கிராம பஞ்சாயத்து நிர்வாகம், கன்று இறந்து போனமைக்காக, கமலேஷ், ஒரு வாரம் பிச்சையெடுக்க வேண்டும் என்றும் அதில் கிடைக்கும் பணத்தை வைத்து, கங்கை நதிக்குச் சென்று, அங்கு மூழ்கி வர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அப்படி செய்யாவிட்டால், கிராமத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படுவார் என்றும் உத்தரவிட்டது.
இது தொடர்பாக கமலேஷ் மகன் அனில் ஸ்ரீவாஸ் கூறியுள்ளதாவது:-
“கடந்த சில நாட்களாக, கிராமத்தினர் எங்களை ஒதுக்கி வைத்துள்ளனர். கிராமத்துக்குள் நுழைய அனுமதிக்க மறுக்கின்றனர். பஞ்சாயத்து நடந்த போது, பயம் காரணமாக, அங்கிருந்த மக்கள் யாரும், தீர்ப்புக்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. தற்போது, வேறு கிராமத்தில் உறவினர் வீட்டில்தான் தாய் தங்கியுள்ளார். தினமும் பிச்சையெடுத்தார். ஒரிரு நாட்களுக்கு முன், உடல்நலக்குறைவால் சிகிச்சை அளிக்கப்பட்டது” என்று அவர் கூறியுள்ளார்.
எனினும், இதை மறுத்துள்ள பஞ்சாயத்து தலைவர் பஞ்சாயத்து உறுப்பினர்களை அழைத்து, தானே பிச்சையெடுத்து, தண்டனையை நிறைவேற்ற போவதாக கூறியுள்ளார்.
இதேவேளை, இது தொடர்பில் யாரும் புகார் அளிக்க முன்வராமையால், வழக்குப் பதிவு செய்யவில்லை என்று, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago