2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

கனடா பிரதமரை வரவேற்ற ட்ரம்பின் மனைவி - வைரலாகும் புகைப்படம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜி7 மாநாட்டில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை  ட்ரம்ப் மனைவி மெலனியா வரவேற்ற புகைப்படம் வைரலாகியுள்ளது.

பிரான்ஸில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப் மனைவி மெலனியா  ட்ரம்ப், கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை வரவேற்றார். 

இந்த புகைப்படம் கிளிக் செய்யப்பட்ட விதம்தான் இப்போது வைரலாக மூல காரணம் ஆகும். ட்ரூடோவைப் பார்க்கும் மெலனியா, மரியாதை நிமித்தமாக அவரின் கன்னத்தில் முத்தமிட்டு வரவேற்றார். 

ஜி7 மாநாட்டில் பங்கேற்ற உலக தலைவர்கள், அவர்களின் மனைவிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது புகைப்பட கலைஞர் ஒருவரால் கிளிக் செய்யப்பட்ட படம்தான் இது.

இந்தப் புகைப்படத்தை எடுத்தபோது, மெலனியாவின் முகபாவனை மற்றும்  ட்ரம்ப் ரியாக்‌ஷன்தான் வைரலாவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துவிட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X