Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 19 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவைச் சேர்ந்தவர் பெய்லி (30), இவரது மனைவி ரேச்சல் (30). ரேச்சல் தனது கணவர் அலெக்சாண்டருக்கு 2017 ம் ஆண்டு இன்று வரை தாய்ப்பால் கொடுக்கிறார். இதுபற்றி ரேச்சல் கூறும் போது, " ஒரு கட்டத்தில் என் கணவருக்கு நான் தாய்ப்பால் கொடுப்பதில் எந்த தவறும் இல்லை என்பதை உணர்ந்தேன். அது மிகவும் சத்தானதாக இருப்பதால் அது உண்மையில் அவருக்கு நல்லது என்றே நான் முடிவு செய்தேன்.
தாய்ப்பாலை குடிக்க ஆரம்பித்த இரண்டு வருடங்களாக அவருக்கு சளி பிடிக்கவில்லை. என் கணவரின் சருமம் மிகவும் நன்றாக இருக்கிறது என்று பலர் கூறுகிறார்கள். என் கணவரும், தாய்ப்பால் சுவையாக இருப்பதால், இப்போது பசும்பாலை விடவும் அதிகமாக விரும்புகிறார். அலெக்சாண்டர் என்னிடம் மிகவும் வித்தியாசமான உணர்வாக இருப்பதாக கூறினார்.
தாய்ப்பாலின் சுவை, அவர் குடித்து பழகிய பசும்பால் போல் இல்லை. என் கணவருக்கு முதல்முதலாக நான் தாய்ப்பால் கொடுத்தபோது, நாங்கள் கப்பல் பயணத்தில் இருந்தோம். அப்போது எனக்கு மார்ப்பகத்தில் வலி அதிகமாக இருந்தது. தாய்ப்பாலை மகளுக்கு கொடுக்க விரும்பினேன். ஆனால் என் குழந்தை குடிக்கவில்லை. இதனால் நான் மிகவும் வேதனையில் இருந்தேன். எனக்கு நோய்த்தொற்று ஏற்படுமோ என்று பயந்தேன். இதை பார்த்த என் கணவர் என்னை அந்த பயத்தில் இருந்து விடுவிப்பதற்காக, முதல் முதலாக பாலை குடிக்க முயற்சித்தார்.
அவர் என்னிடமிருந்து தாய்ப்பால் குடித்த பின்னர் நான் பதற்றம் அடைந்தேன். ஆனால் அதைச் செய்தவுடன், எனக்கு நன்றாக இருந்தது. இது மோசமான விஷயமாக எனக்கு தோன்றவில்லை, நான் என் கணவருக்கு தாய்ப்பால் கொடுக்கும் முன்பு என் குழந்தைக்கு போதுமானஅளவு தாய்ப்பால் கொடுப்பதை உறுதி செய்து வந்தேன்.
என் மூத்த குழந்தை ஆர்யாவுக்கு மட்டுமல்ல, இளைய குழந்தையான மத்தேயுக்கு 2 வயதில் தாய்ப்பால் கொடுக்கும் போதும் எனக்கு அதிக பால் வந்து கொண்டிருந்தது. அதனால் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவின் போது அலெக்சாண்டருக்கு தாய்ப்பால் கொடுத்தேன்.
இப்போது என் கணவர் அலெக்சாண்டருக்கு இரவில் மட்டுமே தாய்ப்பால் தருகிறேன். இதில் என்ன ஒரு சிக்கல் என்றால், நான் இன்று என்ன சாப்பிட்டாலும், அலெக்சாண்டருக்கு அதன் விளைவுகள் வருகிறது. காரமான ஒன்றை சாப்பிட்டால், அது அலெக்சாண்டருக்கு வாயுவையும் தருகிறது.
இந்த தாய்ப்பால் பழக்கம் தவறாக தோன்றினாலும் இந்த செயலுக்காக வெட்கப்படவில்லை, மோசமானது என்று நினைக்கவில்லை. இந்த பழக்கம் எங்களுக்குள் அன்பை அதிகரிக்கிறது" இவ்வாறு ரேச்சல் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
3 hours ago
5 hours ago