2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

கைசுத்தி தூக்கும் நீதிபதிக்கு அதை காட்டியதால் பரபரப்பு

Kogilavani   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அயர்லாந்திலுள்ள நீதிமன்றமொன்றில் நடைபெற்ற வழக்கொன்றின் போது குற்றம்சாட்டப்பட்டிருந்த நபரொருவர் ஆத்திரமடைந்து தனது ஆணுறுப்பை நீதிபதியிடம் காட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  

தாக்குதல் சம்பவமொன்றில் குற்றம்சாட்டப்பட்டிருந்த நபரொருவரே இவ்வாறு நீதிபதியை நோக்கி தனது ஆணுறுப்பை காட்டியுள்ளார். இதனால் நீதிமன்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இளைஞன் (வயது 17)  ஒருவன் மீதான தாக்குதல் தொடர்பிலான வழக்கு விசாரணை அயர்லாந்து, என்னிஸ் மாவட்டத்திலுள்ள நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இவ்வழக்கில் பிறையன் ஜோய்ஸ் (வயது 24), அவரின் சகோததரான ஜோன் ஜோய்ஸ்(18) ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

வழக்கு விசாரணையின்போது ஜோன் ஜோய்ஸை பிணையில் செல்வதற்கு அனுமதிக்குமாறு அவரது சட்டத்தரணி கோரிய கோரிக்கையை நீதிபதி பட்ரிக் டேர்கன் நிராகரித்தார். இதனால் ஆத்திரமடைந்த பிறையன் ஜோய்ஸ், கூச்சலிட்டுகொண்டே தான் அணிந்திருந்த காற்சட்டையை கலற்றி தனது அந்தரங்க உறுப்பை வெளியில் எடுத்து நீதிபதிக்கு  காண்பித்துள்ளார்.

இதனால் நீதிமன்றில் பரபரப்பு ஏற்பட்டதுடன் வழக்கு விசாணையை இடைநிறுத்திவிட்டு நீதிபதி தனது அறைக்கு சென்றதுடன் நீதிமன்றத்திலிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். சுமார் அரை மணிநேரத்தின் பின்னர் அவ்வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. நீதிபதி மேற்படி இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X