Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2021 ஜூன் 06 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருமண வைபவமொன்றில் மணமகளுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அதனால் அவர் மரணமடைந்தார். அதனையடுத்து, மணமகளின் தங்கையை மணமுடித்தார் மணமகன்.
இந்தச் சம்பவம் இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் எட்டாவோ நகரில் நடைபெற்றுள்ளது.
சுர்பி என்னும் மணமகளும் மன்ஜேஸ்குமார் என்னும் மணமகனும் மாலை மாற்றிக்கொண்டபின்னர் மணமகளுக்கு தடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே டொக்டர் அவ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டபோதும் மணமகளின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
இதனையடுத்து இரண்டு குடும்பத்தினரும் கலந்துபேசி திருமண வைபவத்தை தொடரத் தீர்மானித்தனர். அதனையத்து மணமகளின் தங்கை நிஷாவை கரம்பற்றினார் மணமகன்.
சுர்பியின் உடல் வேறொரு அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தங்கையின் திருமணம் இனிதே நடைபெற்றது. பின்னர் பிரேதம் தகனம் செய்யப்பட்டது.
சுர்பியின் சகோதரன் சவுரப் இதுபற்றி கூறுகையில், இது நம்பமுடியாத ஒரு நிகழ்வாக இருக்கிறது. ஓர் அறையில் பிரேதம் மற்ற அறையில் திருமணத்துக்கு மணமகள் அலங்காரம். இந்நிலையில், என்ன செய்வதென்று எங்களுக்குப் புரியவில்லை. இரண்டு குடும்பத்தினரும் கலந்துபேசி இந்த முடிவை எடுத்தனர்” என்று கூறினார்.
மணமகளின் தாயான குத்திதேவி கடுமையான மன அழுத்தம்காரணமாக அவரை சாந்தப்படுத்தும்வகையில் மகன் கௌரதேவ் அழைத்துச் சென்றார்.
“அம்மா மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார். மகளைப் பற்றி பல கனவுகளில் இருந்தார்” என்றும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago