Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Editorial / 2024 ஏப்ரல் 02 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள், ஒரே ஆளை மணந்து கொண்ட சம்பவம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
உலகம் முழுவதும் பிரபலமான இரட்டை சகோதரிகளாக இருப்பவர்கள், Abby Hensel. இவர்கள் ஒரே ஆளை திருமணம் செய்து கொண்ட விஷயம், தற்போது இணையவாசிகளிடையே வைரலாகி வருகிறது.
அமெரிக்காவை சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள், Abby மற்றும் Brittany Hensel. இவர்கள், தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்த நேர்காணல் மூலம் பிரபலமாக மாறினர். இவர்களுக்கு ஒரே உடலில் இரு தலை, இரு மூளை, இரு இதயம், நான்கு நுரையீரல்கள். ஆனால், ஒரே உடல். ஒருவர் வலது கையை கண்ட்ரோல் செய்ய, இன்னொருவர் இடது கையை கண்ட்ரோல் செய்கிறார். இவர்களை வைத்து 90களில் பல பக்கங்களுக்கு பத்திரிகை செய்திகள் வந்துள்ளன. இவர்கள், நடக்க தெரியாத வயதில் தவழ்வதில் இருந்து. நடை பழகுவது, நீச்சல் பயிற்சி மேற்கொள்வது, சைக்கிள் ஓட்டுவது, கார் ஓட்டுவது என அனைத்தையும் ஒன்றாகவே செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இவர்கள், 2013ஆம் ஆண்டு முதல், மின்னெசோடா என்ற அமெரிக்க மாகாணத்தில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். அது மட்டுமன்றி, தனியே ஒரு டிவி சீரிஸையும் ஆரம்பித்தனர். இதன் மூலம், இவர்களுக்கு உலகம் முழுவதும் இருந்து ஆடியன்ஸ் கிடைத்தனர்.
சில நாட்களுக்கு முன்பு, இந்த ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள் ஒருவருடன் திருமண உடையில் நடனமாடுவது போன்ற வீடியோ வைரலானது. இதையடுத்து இவர்களுக்கு திருமணம் ஆகி விட்டதாக கூறப்படுகிறது. இவர்கள், 2021ஆம் ஆண்டு ஜாஷ் பௌளிங் என்பவரை திருமணம் செய்துகொண்டதாகவும், இவர் ராணுவத்தில் பணிபுரியும் நர்ஸ் என்றும் கூறப்படுகிறது.
பிழைக்க முடியாது எனக்கூறிய மருத்துவர்கள்..
பாெதுவாக, இவ்வாறு ஒட்டிப்பிறக்கும் இரட்டைக்குழந்தைகளில் சிலர் மட்டுமே உயிர் வாழ்கின்றனர். அதிலும், ஒரு சிலர் மட்டுமே நீண்ட வருடங்கள் உயிர் வாழ்கின்றனர். Abby மற்றும் Brittany Hensel பிறக்கும் போது, இவர்கள் உயிர்பிழைப்பதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், நல்ல முறையில் பிறந்து, வளர்ந்து நிற்கும் இந்த அதிசய பிறவிகளான ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகளுக்கு தற்போது 34 வயதாகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago