Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை
J.A. George / 2021 பெப்ரவரி 18 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தரப் பிரதேசத்தில் மாட்டுக்கு தீவனம் வாங்கச் சென்ற 3 சிறுமிகள் ஒன்றாக கட்டப்பட்டிருந்ததுடன் இருவர் இறந்த நிலையிலும், ஒருவர் குற்றுயிராகவும் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 13,16 வயது சகோதரிகள் இருவர் தங்களுடைய 17 வயது உறவுக்கார சிறுமியுடன் மாட்டுக்கு தீவனம் வாங்க புதன்கிழமை மதியம் சென்றிருக்கின்றனர்.
மாலைநேரம் ஆகியும் சிறுமிகள் வீடு திரும்பாததால் பயந்துபோன சிறுமிகளின் குடும்பத்தார் அவர்களைத் தேடிச் சென்றிருக்கின்றனர்.
தேடிச்சென்ற அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. மூன்று சிறுமிகளும் துப்பட்டாவால் ஒன்றாக சேர்த்துக் கட்டப்பட்டு வயலில் கிடந்ததை கண்டறிந்திருக்கின்றனர்.
சிறுமிகளை காப்பாற்ற எண்ணி கான்பூர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது இரண்டு சிறுமிகள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவித்துவிட்டனர்.
17 வயது சிறுமி மட்டும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்ததால் அவரை கான்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கின்றனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சிறுமிகள் விஷம் அருந்தியதற்கான அறிகுறிகள் தென்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து, இறந்த இரண்டு சிறுமிகளின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியிருக்கின்றனர்.
ஆறுபேர் கொண்ட பொலிஸ்குழு சம்பவ இடத்தில் மோப்ப நாய்களின் உதவியுடன் விசாரணை நடத்திவருகின்றனர். சிறுமிகள் கட்டப்பட்டிருந்த இடத்தில் அதிக அளவிலான நுரை இருந்ததாக பொலிஸ் அதிகாரி ஆனந்த குல்கர்னி தெரிவித்திருக்கிறார்.
மேலும் பிரேத பரிசோதனை முடிந்தபிறகே இந்த கொலைகளின் பின்னணியிலுள்ள பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
8 minute ago
17 minute ago
1 hours ago