Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை
J.A. George / 2022 ஜனவரி 26 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருவில் கடலில் கலந்துள்ள எண்ணெய் படலத்தை நீக்க ஏராளமானோர் தங்கள் முடியை தானமாக வழங்கி வருகின்றனர்.
பெருவில் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எண்ணெய் கொண்டு சென்ற கப்பலில் ஏற்பட்ட கசிவு காரணமாக சுமார் 3 கிலோ மீட்டர் கடற்பரப்பு மாசடைந்தது.
6,000 பேர்லல் எண்ணெய் கடலில் கலந்துள்ளதாகவும், 21 கடற்கரைகள் எண்ணெய் கழிவால் மாசடைந்துள்ளதாகவும் அந்நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.
கடற்கரையில் படர்ந்துள்ள எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் ஏராளமான தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், எண்ணெய் கசிவை அகற்ற புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளது பெரு சுற்றுச்சூழல் அமைச்சகம்.
முடியை கயிறு போல உருளை வடிவில் திரித்து அதனை கடற்கரை அலைகளில் மூழ்கடிக்கும்படி செய்வதால் நீரில் உள்ள எண்ணெய் படலங்களை முடி உறிஞ்சி விடும் என கூறப்படுகிறது.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த பல டன் கணக்கிலான முடி தேவைப்படும் நிலையில், எண்ணெய் படலத்தை அகற்ற பொதுமக்கள் தங்கள் முடியை தானமாக வழங்கலாம் என அரசு, சமூக ஊடகங்கள் வாயிலாக அறிவித்தது.
இதையடுத்து சிகை அலங்கார நிபுணர்கள் உதவியுடன் லிமா நகராட்சி அலுவலகத்தில் முடி சேகரிப்பு மையமும் அமைக்கப்பட்டது. இதனை அறிந்த அந்நாட்டு மக்கள், சுற்றுச்சூழலை பாதுகாக்க தங்கள் முடியை தானமாக வழங்க படையெடுத்துள்ளனர்.
அண்மையில் டாங்கோ அருகே கடலில் எரிமலை வெடித்ததின் எதிரொலியாக பெருவில் எழுந்த உயர் அலைகளால் கப்பலில் இருந்து எண்ணெய் கசிந்ததே இந்த பேரிடருக்கு காரணம் என கூறப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
4 hours ago
5 hours ago
7 hours ago