Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
Editorial / 2018 மார்ச் 19 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய நவீன உலகில் மருத்துவத்தின் வளர்ச்சி வேகத்தில், பல்வேறுவிதமான அளப்பறிய சேவைகளையும், சாதனைகளையும் கண்டுவருகின்றோம். அந்தவகையில், ஒன்று தான் “பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை”. பாதிப்புறாத உடற்பகுதியில் இருந்து தசைகளைப் பெற்று, சிதைவடைந்து போயுள்ள உடற்பகுதிகளில் பொருத்துவதன் மூலம் சிகிச்சையளிப்பதே, இப்பிளாஸ்டிக் சத்திர சிகிச்சைமுறையாகும்.
இச்சிகிச்சை முதன்முதலில் 1916 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. உலகின் முதலாவது சத்திர சிகிச்சை தொடர்பில், பல வாதங்கள் எழலாயின. எனினும் 1916 ஆம் ஆண்டு, வோல்டர் ஜெயோ, என்ற பிரித்தானிய போர் வீரராக முதலாம் உலக யுத்தத்தில் பங்கேற்ற நபருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையே, உலகின் முதலாவது பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையாக ஏற்றுகொள்ளப்பட்டது.
யுத்தத்தின் போது 1916 ஆம் ஆண்டு அவரது முகம் பாதிப்புக்குள்ளாகி சிதைந்து போனது. கண்கள் மூக்கின் மேற்பகுதிகள் முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவர் “ஹோர்லன்ட் கியிஸ்“ என்பவரால் பொறுப்பேற்கப்பட்டார்.
பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையின் தந்தை என அழைக்கப்படும் ஹோர்ல்ட் அந்த கால கட்டத்தில் தான் “பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை” க்கு என தனி மருத்துவப் பிரிவை ஆரம்பித்திருந்தார். 1917 ஆம் ஆண்டு, வோல்டரின் பாதிப்புறாத ஏனைய உடல் பகுதிகளில் இருந்து தசைகள் எடுக்கப்பட்டு முகத்தில் பொருத்தப்பட்டு சிகிச்சை ஆரம்பமானது.
ஆரம்பக்கட்டம் என்பதால் பலருக்கு சிகிச்சைகள் தவறிப்போயின. ஆனால், வோல்டரின் சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேறியது. புதிய முகத்தோற்றம் அவருக்கு கிடைத்தது! உலகின் முதலாவது பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையாகவும் இது உத்தியோக பூர்வமாக ஏற்று கொள்ளப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago