2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

உரிமையாளருடன் அலுவலகம் செல்லும் பூனை

Kogilavani   / 2021 மே 04 , மு.ப. 11:30 - 1     - {{hitsCtrl.values.hits}}

வளர்ப்புப் பிராணிகள் எப்போதும் உரிமையாளர்கள் மீது அலாதிப்பிரியத்துடன் இருப்பது அனைவரும் அறிந்ததே.

உரிமையாளர்களின் பிரிவைத் தாங்க இயலாது அவர்களுக்காக உயிரைவிட்ட செல்லப்பிராணிகளின் கதைகளையும் நாம் கேள்வியுற்றுள்ளோம்.

அந்தவகையில் அக்குறணைப் பிரதேசத்தில் தனது உரிமையாளரைப் பிரிய மனமில்லாத பூனையொன்று, அவருடன் அலுவலகம் சென்றுவருவது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாதுதின் வளர்த்துவரும் பூனையே, இவ்வாறு உரிமையாளருடன் அலுவலகம் சென்றவருவதை வழக்கமாகக்கொண்டுள்ளது.

அக்குறணை பிரதேச செயலகத்துக்கு வருவதற்காக தவிசாளர் காரில் பயணிக்கும்போது குறித்த பூனை காரின் முன்பகுதியில் அமர்ந்துக்கொள்வதாகவும் அலுவலகம் வந்தப் பின்னர் தவிசாளரின் மேசையில் ஏறி அமர்ந்துக்கொள்வதாகவும் தெரியவருகிறது.

கடமை முடிந்து வீடு செல்லும்போதும் அந்தப் பூனையும் அவருடன் வீட்டுக்குச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தனது ஓய்வுநேரங்களை, பூனைகளுடன் செலவிடுவதில் தான் பெரும் ஆனந்தமடைவதாக, தவிசாளர் தெரிவித்துள்ளார்.

(மொஹொமட் ஆஸிக்)


You May Also Like

  Comments - 1

  • Azeem Lahir Wednesday, 05 May 2021 04:02 PM

    It is so much happy to witness his love towards this cat. Generally he is a great man with great heart. He has helped a lot of needy people living in Akurana.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X