2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

உயிரிழந்தவருக்கு தடுப்பூசி சான்றிதழ்

Freelancer   / 2021 டிசெம்பர் 11 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய பிரதேச மாநிலத்தில் உயிரிழந்த நபரொருவரின் அலைபேசிக்கு தடுப்பூசி செலுத்தியதாக குறுஞ்செய்தி வந்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்கர் மாவட்டத்தை சேர்ந்த புருஷோத்தம் ஷாக்யவார் (வயது 78) என்ற வயோதிபர் கடந்த மே மாதம் உயிரிழந்தார்.  

உயிரிழந்து ஏறத்தாழ 6 மாதங்கள் நெருங்கிவிட்ட நிலையில், அவருக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டதாகக் கூறி குறுஞ்செய்தி வந்துள்ளது.  

எனது தந்தையின் அலைபேசி எண்ணுக்கு கடந்த 3 ஆம் திகதி குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில், 2ஆவது டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழும் தரவிறக்கம் செய்ய முடிந்தது என, உயிரிழந்த ஷாக்யவாரின் மகன் தெரிவித்துள்ளார்.  

இவ்விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், கணினியில் ஏற்படும் கோளாறுகள் காரணமாக இதுபோன்ற குளறுபடி நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் மாவட்ட தடுப்பூசி அதிகாரி தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X