2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

இன்று முதல் மினி நிலவைக் காணலாம்

Simrith   / 2024 செப்டெம்பர் 29 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூமி அதன் வழக்கமான நிலவை விட மிகவும் சிறியதாக இருந்தாலும், ஒரு தற்காலிக குட்டி நிலவை பெற உள்ளது.

இந்த மினி நிலவு உண்மையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோள் ஆகும், இது ஒரு பாடசாலை பேருந்தின் அளவானதாகும்.

இன்று அது பூமிக்கு மிக அருகில் பயணிக்கவுள்ளதாகவும், புவியின் ஈர்ப்பு விசை தற்காலிகமாக அதைத் தக்கவைக்கும் எனவும், இதனால் அது பூமியைச் சுற்றி இரண்டு மாதங்கள் இருக்கும் எனவும் வானியலாளர்கள் கூறுகின்றனர்.

இந்த "மினி நிலவு" வெற்றுக் கண்ணுக்குத் தெரியாது என்றாலும் தொலைநோக்கி மூலம் காணலாம். இந்த குறுகிய கால விண்வெளி கோளானது வானியலாளர்களுக்கு ஒரு புதிய ஆராய்ச்சிக்கான வாய்ப்பை வழங்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X