2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்படுத்திய ஓரங்குட்டான்

Freelancer   / 2024 மே 07 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

முகத்தில் உண்டான காயத்தை சரி செய்ய, ஆண் ஓரங்குட்டான் ஒன்று மருத்துவ குணம் கொண்ட மூலிகைச் செடியை பயன்படுத்தியிருப்பது, ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வனவிலங்கு ஒன்று காயத்தை குணப்படுத்த மூலிகைச் செடியை பயன்படுத்தியிருப்பதை இப்போதுதான் மனிதர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். செடிகளை மருத்துவ பயன்பாட்டுக்கு மனிதர்களைப் போல விலங்குகளும் பயன்படுத்துவது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

35 வயதான ராகூஸ் என்கிற ஆண் ஓரங்குட்டான், சுமத்தரா தீவிலிருக்கும் கனங் லீசர் தேசிய பூங்காவில் வசித்து வருகிறது.

இந்நிலையில், ராகூஸின் முகத்தில் காயம் இருப்பதையும், அதன் மீது அது, மூலிகைச் செடியை கசக்கி மருந்து போல் பூசியிருப்பதையும் அங்கிருக்கும் ஆராய்ச்சியாளர் ஒருவர் கவனித்து இருக்கிறார்.

அது, தன் முகத்தில் இருக்கும் காயத்தை குணப்படுத்த தேர்ந்தெடுத்தது மஞ்சள் வேர். ஆம், நம் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மஞ்சளைத்தான் ஓரங்குட்டானும் தன் முகத்தில் காயம் நீங்க பயன்படுத்தியிருக்கிறது.

பொதுவாக ஓரங்குட்டான்கள் மஞ்சள் செடியை உணவாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், இந்த ஓரங்குட்டான் மஞ்சளை கடித்து, மென்று, அதனை முகத்தில் பூசியிருக்கிறது. ஒரு மாதம் கழித்து அந்தக் காயம் இருந்த தடம் தெரியாமல் குணமாகிவிட்டதாம்.

இந்நிலையில், ஜப்பானின் நாகசாகி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மைக்கேல் ஹவ்மேன், “விலங்கு ஒன்று காயத்தை சரிசெய்ய செடிகளை மருந்தாக பயன்படுத்துவது குறித்து ஆராய்ச்சி செய்யப்படுவது இதுவே முறை” என தெரிவித்திருக்கிறார். S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X