Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை
Editorial / 2025 மார்ச் 10 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருமணம் மீறிய உறவு என்பது ஒரு திருமண உறவை பாழாக்கும் ஒரு மோசமான விஷயமாகும். மாறிவரும் வாழ்க்கை முறையாலும், தொழில்நுட்ப வளர்ச்சியாலும் இப்போது திருமணம் மீறிய உறவு என்பது வெகுவாக அதிகரித்து வருகிறது. திருமணம் மீறிய உறவு ஒருபோதும் பாலினத்தை சார்ந்தது இல்லை, ஏனெனில் ஆண், பெண் இருவருமே திருமணம் மீறிய உறவில் ஈடுபடுகின்றனர்.
திருமணம் மீறிய உறவிற்கு பாலினம் எப்படி தடையில்லையோ, அதேபோல நாடும் தடையில்லை. ஏனெனில் அனைத்து நாடுகளில் இருப்பவர்களும் திருமணம் மீறிய உறவில் ஈடுபடுகின்றனர். பிரபல ஆணுறைத் தயாரிப்பு நிறுவனம் பல்வேறு மக்களிடையே நடத்திய ஆய்வில் எந்த நாட்டில் திருமணமான பெண்கள் அதிகளவில் திருமணம் மீறிய உறவில் ஈடுபடுகின்றனர் என்ற பட்டியலை தொகுத்துள்ளது. இந்த பதிவில் எந்த நாட்டை சேர்ந்த பெண்கள் திருமணம் மீறிய உறவில் அதிகம் ஈடுபடுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
அதிர்ச்சியளிக்கும் விதமாக நைஜீரிய நாட்டு பெண்கள் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். நைஜீரியப் பெண்களில் 62 சதவீதம் பேர் திருமணம் மீறிய உறவில் ஈடுபடுபவர்களாக இருக்கிறார்கள். நைஜீரிய நாட்டில் ஏற்படும் 80 சதவீத விவாகரத்துக்கு கள்ளக்காதலே காரணமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. தாய்லாந்து தாய்லாந்தில் வசிக்கும் 59 சதவீத பெண்கள் திருமணம் மீறிய உறவில் ஈடுபடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
மேற்கத்திய நாடுகளை விட தாய்லாந்தில் சமூக விதிகள் மிகவும் தளர்வானதாக உள்ளது. பல கணவர்கள் தங்கள் மனைவிகள் விபச்சாரம் செய்ய அனுமதிக்கிறார்கள். தாய்லாந்து பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அதிகளவில் திருமணம் மீறிய உறவில் ஈடுபடுகின்றனர். இதிலும் தாய்லாந்துதான் முதலிடத்தில் உள்ளது.
கிட்டதட்ட 42 சதவீத பெண்கள் துரோகம் மற்றும் திருமணம் மீறிய உறவில் ஈடுபடுவதால் இந்த பட்டியலில் பிரிட்டன் மூன்றாவது இடத்தில் உள்ளது. வளர்ந்த நாடுகளில் பெண்கள் ஏமாற்றுவது பிரிட்டனில் மிகவும் அதிகமாக உள்ளது.
மலேசிய பெண்களில் 33 சதவீதம் பேர் திருமணம் மீறிய உறவில் இருப்பதாக அறியப்படுகிறது. குறிப்பாக மலேசியப் பெண்களில் 39 சதவீத பேர் தங்கள் திருமண உறுதிமொழியை ஏமாற்றுவதாக அறியப்படுகிறது. அதேசமயம் மலேசிய ஆண்களில் பெரும்பாலானோர் சராசரியாக 3 பாலியல் துணையைக் கொண்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. ரஷ்யா ரஷ்ய பெண்களில் 33 சதவீத பேர் ஏமாற்றுபவர்கள் என்று அறியப்படுகிறார்கள். சுவாரஸ்யமாக, ரஷ்யாவில் கள்ள உறவில் ஈடுபடுவர் மீது குற்றம் சாட்டப்படுவதில்லை. கள்ள உறவைத் தூண்டும் நபர் மீதுதான் குற்றம் சுமத்தப்படுகிறது. அது பெண்களாக இருந்தாலும் குற்றம்தான். இது அங்கு 'நூற்றாண்டு பழமையான பாரம்பரியம்' என்று அழைக்கப்டுகிறது.
சிங்கப்பூரில் 19 சதவீத பெண்கள் திருமணம் மீறிய உறவில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. மற்ற எந்த நாடுகளையும் விட சிங்கப்பூர் ஆண்கள் அதிகளவு திருமணம் மீறிய உறவில் ஈடுபடுகின்றனர். இங்கு பெரும்பாலான ஆண்களுக்கு 10-க்கும் மேற்பட்ட பாலியல் துணைகள் இருக்கிறார்கள். இங்கு பெண்கள் திருமணம் மீறிய உறவில் ஈடுபட இதுவும் ஒரு காரணமாகும்.
பிரான்ஸ் பிரான்ஸ் நாட்டில் 16.3 சதவீத பெண்கள் திருமணம் மீறிய உறவில் ஈடுபடுகிறார்கள். அதேசமயம் பிரான்ஸில் 22 சதவீத ஆண்கள் திருமணம் மீறிய உறவில் ஈடுபடுகிறார்கள். அதனால்தான் இந்த நாடு பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா அமெரிக்காவில் திருமணமான பெண்களில் 14 சதவீதமான பேர் திருமணம் மீறிய உறவில் ஈடுபடுவதாக கூறப்பட்டுள்ளது. திருமணமான ஆண்களில் 54 சதவீதம் பேர் தங்கள் துணையின் திருமணத்திற்குப் புறம்பான செயல்பாடுகள் பற்றி தெரியவில்லை என்பது இன்னும் மோசமானது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago