2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

ஆசனவாயிலில் சிக்கிய கத்தி

Gavitha   / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறு வயதில் என்னதான் ஆரோக்கியமான உணவை உண்டாலும், கொஞ்சம் வயது ஆகிவிட்டாலே ஏதாவது ஒரு நோய் வந்து தொற்றிக்கொள்ளும். ஆரோக்கியமாக இருப்பதற்கு எம்மால் என்னவெல்லாம் செய்யமுடியுமோ அதையெல்லாம் முயற்சித்து பார்ப்பதுண்டு.

ஒரு சிலர் தங்களது உடலில் என்ன மாற்றம் ஏற்பட்டாலும் அதை எப்படியாவது இல்லாது ஆக்கிவிடவேண்டும் என்று எண்ணி, தெரியாத விடயங்களை செய்துகொள்வதுமுண்டு. அப்படித்தான், இந்த நபரும் முயற்சித்து கடைசியில் விபரீதத்தில் போய் முடிந்துள்ளது.

சீனாவைச் சேர்ந்த காயோ (வயது 54) என்பவர், தனக்கு மூலவியாதி ஏற்பட்டுள்ளதாக எண்ணி மிகவும் சிரமப்பட்டுள்ளார்.

வைத்தியர்களிடம் எப்படி அந்த இடத்தை காண்பிப்பது என்று எண்ணி, தனது முயற்சியிலேயே ஏதாவது செய்து அதனை சரிசெய்து விடவேண்டும் என்று எண்ணியுள்ளார்.

இவ்வாறு எண்ணியவர், ஒரு சிறிய கத்தியை எடுத்து ஆசனவாயில் வைத்து, எதையோ செய்துள்ளார். செய்தவருக்கு என்ன ஆகியது என்று கூட தெரியவில்லையாம். திடீரென்று கத்தி கையைவிட்டு வழுக்கி, ஆசனவாயில் குத்திவிட்டதாம்.

என்னசெய்வதென்று அறியாமல், உடனடியாக அம்பூலன்ஸ்ஸூக்கு அழைப்பை ஏற்படுத்தி, வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார். இந்த விடயத்தை கேள்விப்பட்ட ஊடகவியலாளர்கள் வைத்தியசாலையை சுற்றவளைத்து விட்டனராம்.

இறுதியில் வைத்தியர்களால் அந்த கத்தி அகற்றப்பட்டதுடன், என்ன காரணத்துக்காக இவர் கத்தியை அந்த இடத்தில் வைத்தார் என்று வைத்தியர்கள் வினவியபோது, தனக்கு மூலவியாதி வந்தாலேயே நான் அதனை சரி செய்ய முயற்சி செய்தேன் என்று தெரிவித்தார்.

எனினும் பரிசோதனை செய்து பார்த்த பின்னர், அவருக்கு மூலவியாதியே இல்லை, அது ஒரு வைரஸார் ஏற்பட்ட மாற்றம் என்று வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

இதைக் கேள்வியுற்ற ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திக்குமுக்காடி போய்விட்டாராம் காயோ.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X