Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை
Mayu / 2024 ஓகஸ்ட் 15 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாம் மனதார விரும்பாவிட்டாலும் Sorry சொல்ல பழகிவிட்டோம். உளவியல் ரீதியாக, ஒருவர் தவறு செய்யாமல் Sorry சொல்லும் போது மற்றவர்களின் நம்பிக்கையை அவர் எளிதில் பெறுகிறார்.
ஆனால் ஒருவர் அதிகமாக Sorry என்ற சொல்லை பயன்படுத்துவது அவரது மன பலவீனத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.
அதிகமாக Sorry சொல்வதற்கு காரணம் மற்றவர்கள் நம்மை மன்னிக்க வேண்டும் என்பதாகவும் இருக்கலாம். ஒரு இடத்தில் மன்னிப்பு தெரிவிப்பதற்கு மாற்றாக நாம் Sorry என்ற சொல்லை பயன்படுத்தி வருகிறோம். Sorry என்ற சொல்லை பலரும் மன்னிப்பு என்ற சொல்லின் மாற்றாகவே கருதுகின்றனர்.
ஆனால் உண்மையில் அதன் அர்த்தம் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா?
வருந்துவது, வருத்தம் தெரிவிப்பது அல்லது நமது தவறுக்காக வருத்தப்படுவதுதான் Sorry என்பதன் உண்மையான பொருள். மன்னிக்கவும் என்று சொன்ன பிறகு, அதே தவறை மீண்டும் செய்யாமல் இருக்க வேண்டும். ‘Sorry’ என்ற வார்த்தை ஆங்கில வார்த்தையான ‘sarig’ அல்லது ‘sorrow’ என்பதிலிருந்து உருவானதாகும். அதன் பொருள் ‘கோபம் அல்லது அதிருப்தி’ என்பதாகும்.
ஏதாவது தவறு செய்த பிறகு வருத்தம், சோகம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்த Sorry என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
பெரும்பாலான மக்கள் இந்த விஷயங்களுக்காக தற்போது Sorry என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை. மன்னிப்பு கேட்பதற்காகவே அந்த சொல்லை பயன்படுத்துவது வழக்கமாகி
விட்டது. இதே போன்ற சொற்கள் பழைய ஜெர்மானிய சிராக் மற்றும் நவீன ஜெர்மானிய சிராகஸ், இந்தோ ஐரோப்பிய சைவ் போன்ற பல மொழிகளில் காணப்படுகின்றன.
சொல்லப்போனால், Sorry என்பதன் முழுமையான வடிவத்தை சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் நாம் பார்த்திருக்கலாம். அதன் படி பார்த்தால் Sorry (Someone Is Really Remembering You) என்றால் யாரோ உங்களை நிஜமாகவே நினைக்கிறார்கள் என்பதே ஆகும். ஆனால் எந்த மொழியியலாளர்களும் இதனை உறுதி செய்யவில்லை.
சதர்ன் ஓரிகான் பல்கலைக்கழகத்தின் மொழியியலாளரான எட்வின் பாட்டிஸ்டெல்லா இதுகுறித்து கூறுகையில், “Sorry" என்ற வார்த்தையை மக்கள் வெவ்வேறு வழிகளில் வெவ்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்த வார்த்தையை அதிகமாகப் பயன்படுத்துபவர்கள் உண்மையில் அதற்காக வருத்தப்பட மாட்டார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
44 minute ago