Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Mayu / 2024 மே 27 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
“வயது என்பது ஒரு எண்” என்று பலரும் கூறுகிறார்கள். அதற்கேற்ப பல நபர்களும் தங்களின் வயதை பொருட்படுத்தாமல் நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் பல சாதனைகளை செய்து வருகிறார்கள். உண்மையில் அவர்கள் செய்யும் செயல்கள் அல்லது சாதனைகளுக்கும், வயதிற்கும் துளியும் சம்பந்தம் இருக்காது.
இத்தனை வயதில் இதை செய்ய முடியுமா! என்ற பிரமிப்பில் நம்மை ஆழ்த்துவார்கள். அந்த வகையில் வயதான பெண் ஒருவர் ஜிம்னாஸ்டிக்ஸ் செய்து காண்போரை சிலிர்க்க வைத்துள்ளார். இந்த காணொளி மூலம் ஒருவர் விரும்பினால், அவரது வயது என்னவாக இருந்தாலும், அவர் எதையும் செய்ய முடியும் என்பதை நம்மால் உணர முடிகிறது.
ஜோஹன்னா குவாஸ் என்ற 98 வயதான வயோதிப பெண்ணொருவர் ஜிம்னாஸ்டிக்கில் செய்து அனைவரையும் ஆச்சிரியப்படுத்தியுள்ளார்.
98 years old.
— anand mahindra (@anandmahindra) May 13, 2024
That’s right—Johanna Quaas is 98.
Never say die.
She’s my #MondayMotivation pic.twitter.com/Ll8b9kFQSb
இந்த வயதான பெண் மிகவும் இலகுவாக ஜிம்னாஸ்டிக் ஆக்டிவிட்டீஸ்களில் ஈடுபடுவதை காண முடிகிறது. அந்த பெண்மணி ஜிம்னாஸ்டிக்ஸ் செய்யும்போது உடற்பயிற்சி பைப்பில் தலைகீழாக தொங்குகிறார், சில சமயங்களில் புஷ்அப்பும் செய்கிறார். 98 வயது பெண்மணியின் இத்தகைய சுறுசுறுப்பை நேரில் பார்த்தவர்களும் சரி, வீடியோவில் பார்ப்போர்களும் சரி அனைவரும் மிகுந்த ஆச்சர்யமடைந்துள்ளனர்
98 வயதான ஜோஹன்னா தனது 10 வயதில் இருந்தே ஜிம்னாஸ்டிக்ஸில் ஈடுபட்டு வருகிறார். ஜெர்மனியில் பிறந்த ஜோஹன்னா குவாஸ் கடந்த 2012ஆம் ஆண்டில், உலகின் மிக வயதான ஜிம்னாஸ்ட் என்ற பட்டத்திற்கான கின்னஸ் உலக சாதனையை பெற்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
17 minute ago
50 minute ago