2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

90 வயதில் 3 குஞ்சுகளுக்குத் தந்தையான ஆமை

Editorial   / 2023 மார்ச் 23 , பி.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது 90 வயதில் ஆ​மை ஒன்று 3 குஞ்சிகளுக்குத் தந்தையான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் ஹியூஸ்டன் (Houston) விலங்குத் தோட்டத்தில் 3 ஆமைக் குஞ்சுகளின் புதுவரவு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Radiated எனும் அந்த வகை ஆமைகள் அழிந்துபோகும் அபாயத்தை எதிர்நோக்கு வருகின்றது. இந்நிலையில், அவற்றின் தந்தையோ 90 வயதான பிக்கிள்ஸ் (Pickles) ஆகும்.

அந்த ஆமையே விலங்குத் தோட்டத்தின் ஆக வயதான விலங்காகும்.  அது 1980களிலிருந்து அந்த விலங்குத் தோட்டத்தில் உள்ளது.

மடகாஸ்கரைச் சேர்ந்த அந்த வகை ஆமைகள் சட்டவிரோதமாய்ச் செல்லப் பிராணிகளாக விற்கப்படுகின்றன. அதனால் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

3 புதிய ஆமைக் குஞ்சுகளைச் சேர்த்து ஹியூஸ்டன் விலங்குத் தோட்டத்தில் radiated வகை ஆமைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X