Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 ஜூலை 28 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது 9 வயது மகளை போதை வஸ்துக்கு அடிமையான ஒருவனிடம் கொடுத்து 'எதை வேண்டுமானாலும் செய்துகொள்' என்று கூறிய நபரை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குலாம் மொஹமட் ஹமீட் கான் எனும் 47 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மன்கார்ட் பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் போபட் சோலங்கீ, தெரிவிக்கையில், 'ஹூசைன் வேலையற்றவர், ஹூஸைனின் மனைவி அவரை வீட்டை விட்டு துரத்தி விட்டார். அதன்பின் உத்திரபிரதேசத்திலுள்ள தனது சொந்த ஊருக்குச் சென்று புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டுமென்று எண்ணியுள்ளார். தனக்கு பணம் தேவைப்படவே மகளின் மூலமே பணத்தை பெற்றுக்கொள்ள அவர் தீர்மானித்துள்ளார்' எனக் கூறியுள்ளார்.
பொலிஸார் கூறுவதன்படி, ஹமீட் ஹூஸைன், கடந்த 17 ஆம் திகதி தனது மகளை அழைத்துக்கொண்டு மன்கார்ட் ரயில் நிலையத்திற்குச் சென்றுள்ளார். மகளை அழைத்துச் செல்வதற்காக தனது மனைவி தேடி வருவார் என்று எதிர்பார்த்து 3 மணித்தியாலம் காத்திருந்துள்ளார். எனினும் அவரது மனைவி ரயில் நிலையத்திற்கு வரவில்லை. எனவே அவர் தனது மகளை கைவிடத் தீர்மானித்தார்.
போதைப்பொருளுக்கு அடிமையான இர்பான் 21 வயதனா இளைஞனிடம் தனது மகளை கொடுத்து, எதை வேண்டுமானாலும் செய்துகொள் என ஹூஸைன் கூறியுள்ளார். அதை ஏற்றுக்கொள்ள இர்பான் தயங்கியபோது, போதைப்பொருள் வாங்கிக்கொள்வதற்காக 20 ரூபா பணத்தையும் இர்பானுக்கு கொடுத்துள்ளார்.
இர்பான் அச்சிறுமியை இருள் நிறைந்த பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்ததுடன் அவளது உடலை சாக்கடையில் வீசி எறிந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
manithan Friday, 29 July 2011 12:15 AM
மேற்படி நாயிலும் கேவலமான நபர்களுக்குக் கடூழியச் சிறையும் மரண தண்டனையும் வழங்க வேண்டும்.
Reply : 0 0
Nilavan Friday, 29 July 2011 12:31 AM
இவர்களுக்கு அல்லாஹ் என்ன தண்டனை வழங்குவாரோ...?
Reply : 0 0
risimb Friday, 29 July 2011 02:34 AM
இவ்வாறான மனிதர்களை " நன்றியுள்ள பிராணியான நாய்க்கு ஒப்பீடு செய்யக்கூடாது" பலகுட்டிகளை ஈன்று எடுத்தாலும் எந்த ஜீவனையும் அவைகள் நெருங்க விடாது. "ஆண்மகன் என்றால் எல்லோருக்கும் சொந்தம்". " பெண்பிள்ளை என்றால் அவள் தாய் தந்தைக்கு,பின் கணவனுக்கு சொந்தம்" பெண் பிள்ளையை தாய்தான் தனது பராமரிப்பில் வைத்துக்கொள்ள வேண்டும்.முதலில் சிறுமிஇன் தாய்க்கு தண்டனை, பின் இருவர்களுக்கும் வழங்க வேண்டும் ...
Reply : 0 0
thamil anban Friday, 29 July 2011 02:39 AM
இஸ்லாமிய சட்டம் உள்ள நாடுகளில் இதற்கு தகுந்த தண்டனை கொடுக்கப்படும். அந்த சிறுமியின் தாயிடம் கேட்டால் நிச்சயம் இவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொல்லுவார். இதுதான் இதற்கு தண்டனை. ஆனால் நமது நாடுகளில் இப்படியான கயவர்களுக்கு சிறைச்சாலைக்குள் அரச பணத்தில் தங்குமிடம் உணவு உடை தொழிலும் கூட....ஆச்சரியமாக இல்லையா????
Reply : 0 0
riyas Friday, 29 July 2011 03:32 AM
அன்பன் சொல்வது சரி.
Reply : 0 0
Hamza Monday, 01 August 2011 04:59 PM
கேஸ் பாரம் ...
Reply : 0 0
Fariz Friday, 30 December 2011 05:27 PM
இந்த மனிதப் பிரப்புகள் மட்டும் என் கைல கிடச்சா மவனே.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago