Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Kogilavani / 2012 ஜனவரி 07 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
7000 அடி உயரத்தில் விமானத்தை செலுத்திக் கொண்டிருந்தபோது தனது விமானத்திற்கு அருகில் 'சுறா' ஒன்று பறந்துகொண்டிருப்பதைக் கண்டு விமானியொருவர் அச்சமடைந்த சம்பவமொன்று நியூஸிலாந்தில் இடம்பெற்றுள்ளது.
இவ்விமானத்தை கிறைஸ்ட்சர்ச் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்க ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்த விமானி 5 அடி நீளமான சுறா முறைத்த நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
தன் கண்களை நம்பமுடியாத நிலையில் விமானி திகைத்தார்.
எனினும் வானத்தில் பறந்த நிலையில் இருந்த சுறாவானது தொலைக்கட்டுப்பாட்டுக் கருவியினால் இயக்கப்படும் வாயு அடைக்கப்பட்ட விளையாட்டுப் பொருள் என்பது பின்னர் கண்டறியப்பட்டது.
நியூஸிலாந்தில் நத்தார் காலத்தில் ஹீலியம் வாயு அடைக்கப்பட்ட நீச்சல் விளையாட்டு உபகரணங்கள் மிகவும் பிரசித்தமாகவுள்ளன.
இந்த வாயு நிரப்பப்பட்ட 'சுறாக்கள்' விமானங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தமாட்டாது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Risvi Sunday, 08 January 2012 01:18 AM
அந்த விமானியின் மனதில் ஒரு கணம் எத்தகைய அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும் என நினைத்துப் பார்க்க உடல் சிலிர்க்கிறது.
Reply : 0 0
MADURANKULI KURANKAAR Sunday, 08 January 2012 06:46 AM
அவரின் கண் முன்னாள் சுவர்க்கம் தெரிந்ததோ, நரகம் தெரிந்ததோ, தெரியவில்லைடா சாமி.
Reply : 0 0
ruthra Sunday, 08 January 2012 10:11 PM
விமானி மேற்படி சுறாவைக் கண்டு அச்சத்தில் விமானக் கட்டுப்பாட்டை இழந்திருந்தால் விளையாட்டு வினையாகியிருக்கும். இவ்வாறான விடயங்களில் விளையாட்டுக்களை தவிர்த்துக்கொள்வதே மேலானது
Reply : 0 0
Razik Tuesday, 10 January 2012 10:10 PM
வியஜ் நடித்த சுறா படத்தை பார்த்து பயந்து விட்டரோ என்று நினைத்தேன் :-)
Reply : 0 0
farsan Thursday, 26 January 2012 09:02 PM
சுறா மீனா பார்த்து தானே
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago
2 hours ago