Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2024 ஜனவரி 22 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாமிருவர் நமக்கு இருவர் என்ற நிலைமை மாறி, நாமிருவர் நமக்கு ஒருவர் என்றே இன்னுமிருக்கிறது. நாடுகளின் நிலைமை இவ்வாறே நீடிக்குமாயின் நமக்கேன் ஒருவர், என்ற சிந்தனையும் வளரக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. இப்படி இருக்கையில், ஐந்து பெண்களை கர்ப்பமாக்கி ஐவருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு நடத்திய சம்பவம் வைரலாகியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த இசைக்கலைஞரான ஸெடி வயது வித்தியாசம் கொண்ட 5 பெண்களை கர்ப்பமாக்கியுள்ளார்.
அந்த 5 பேருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு நடத்தப்பட்ட சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
5 பேருடன் பல நேரங்களில் தொடர்பு வைத்திருந்தபோதிலும், அனைவரும் சில நாட்கள் வித்தியாசத்தில் கர்ப்பம் அடைந்ததாக ஸெடி தெரிவித்துள்ளார். அவ்விளைஞனுக்கு வயது 22 தானாம்.
இந்த சம்பவம் ஸெடியால் கர்ப்பமாக்கப்பட்ட 29 வயதாகும் ஆஷ்லே என்ற பெண், சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டதை தொடர்ந்து உலகுக்கு தெரியவந்தது.
இந்த பதிவை 1 கோடிக்கும் அதிகமானோர் பார்த்து அதனை பகிர்ந்துள்ளனர். எல்லாம் நல்லபடியாக முடிந்தால் விரைவில் குடும்பத்தினரின் எண்ணிக்கை 11 ஆகும் என்று ஆஷ்லே கூறியுள்ளார்.
இதுகுறித்து கருத்து பகிர்ந்துள்ள நெட்டிசன்கள் உங்கள் 5 பேருக்கு இடையே சண்டை வராதா எனறு கேட்டுள்ளனர். இதற்கு பதில் அளித்துள்ள ஆஷ்லே, நாங்கள் ஒரு குடும்பமாக எங்களது குழந்தைகளை வரவேற்க தயாராக உள்ளோம் என பதில் அளித்துள்ளார். நாங்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் எங்கள் குழந்தைகளுக்கு நல்லது என்று கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
34 minute ago
34 minute ago
41 minute ago