2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

5 வருடங்களாக காட்டில் குரங்குகளுடன் வாழ்ந்த பெண்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 24 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணொருவர், கடந்த ஐந்து வருடங்களாக காட்டில் குரங்குகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் வேட்டைக்காரர்களால் மீட்கப்பட்ட சம்பவமொன்று கம்போடியாவில் இடம்பெற்றுள்ளது.
 
இங்கிலாந்தை சேர்ந்த மரினா ஷாப்மன். இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர், சமூக விரோதிகள் சிலரால் கம்போடியா காட்டுக்கு கடத்திச் செல்லப்பட்டு மறைத்து வைக்கப்பட்டார்.

அவர்களிடம் இருந்து தப்பிய மேற்படி பெண், காட்டின் அடர்ந்த பகுதியொன்றில் தனிமையாக்கப்பட்ட நிலையில் கடந்த ஐந்து வருடங்களாக அங்கிருந்த குரங்குகளுன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், மிருகங்கள் மற்றும் பறவைகளை வேட்டையாடுவதற்காக காட்டுக்குச் சென்ற வேட்டைக்காரர்கள் சிலர், குறித்த பெண்ணை மீட்டு வந்துள்ளனர்.

இது குறித்து அவர் கூறுகையில், 'பறவைகள் மற்றும் முயல்களை வேட்டையாடி சாப்பிட்டே நான் இத்தனை காலமும் உயிர் வாழ்ந்தேன். 'தி ஜங்கிள் டூ லைப்' என்ற புத்தகத்தில் வரும் கதையில் 'மவுஜில்' என்ற டார்ஸன் கதாபாத்திரத்தை குரங்குகள் வளர்க்கும்.

அதுபோன்று நானும் 5 ஆண்டுகள் குரங்குகளுடன் வாழ்ந்தேன். அது தனக்கு ஒரு புதுவிதமான அனுபவமாக இருந்தது' என குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .