Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 ஜூலை 22 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் டில்லி நகரில் 40 வயதான ஆசிரியை ஒருவருக்கு ஆயிரக்கணக்கான காதல் குறுஞ்செய்திகளை அனுப்பிய 20 வயது மாணவனொருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தெற்கு டில்லி பிரதேசத்தைச் சேர்ந்த சௌவிக் பன்ஜாரி என்ற 20 வயது மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளான். குறித்த மாணவன்; மேற்படி ஆசிரியின் மீது காதல் கொண்டதாகவும் அவனது மன உணர்வுகளை வெளிப்படுத்த 1000 குறுஞ்செய்திகளை ஆசிரியையின் தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்பியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
'மேற்படி மாணவன் அந்த ஆசிரியையை காதலித்துள்ளான். ஆனால், ஆசிரியை தனக்கு 40 வயதாகிறது என்று தெரிவித்தபோது அம் மாணவன் அதிர்ச்சியடைந்தான். அதேவேளை தனக்கு ஏற்கனவே திருமனம் முடிந்துவிட்டதென்றும் தனக்கு 2 பிள்ளைகள் இருக்கின்றனறென்றும் அந்த ஆசிரியை தெரிவித்துள்ளார். ஆசிரியர் கூறியதை கேட்ட மாணவன் கண்ணீர் விட்டு அழுததுடன் ஆசிரியை 40 வயதானவர் போல் தோன்றவில்லை எனவும் 20 வயதானவர் போன்றே தென்படுவதாகவும் அவரை தான் காதலிப்பதாகவும் கூறியுள்ளான்' என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இம்மாணவன் வானொலி ஒலிபரப்பு பயிற்சியொன்றை பயின்றுவருகிறான். அங்கு கற்பிக்கும் ஆசிரியை ஒருவருடனேயே அவன் காதல் கொண்டுள்ளான்.
குறித்த ஆசிரியை இச்சம்பவத்தை உறுதி செய்துள்ளார். ஆனால் மேலதிக தகவல்களை அவர் வழங்குவதற்கு மறுத்துவிட்டார்.
'அவன் எமது நிறுவகத்தில் மாணவனாக இருந்தான். தற்போது அவனது அனுமதியை ரத்துச்செய்துவிட்டோம்' என அப்பயிற்சி நிறுவகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
சுவாக் பல தடவைகள் தனது காதலை ஆசிரியையிடம் கூறியுள்ளபோதிலும் அதனை அவர் நிராகரித்த நிலையில், அம் மாணவன் குறுஞ்செய்திகளை ஆனுப்புவதற்கு ஆரம்பித்துள்ளான்.
இது தொடர்பாக ஆசிரியை செய்த முறைப்பாட்டையடுத்து அம்மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
IBNU ABOO Saturday, 23 July 2011 03:48 AM
காதலுக்கு கண்மட்டுமில்லை வயது பொருத்தமும் இல்லை .மனசு பொருந்தினால் மட்டும் போதும் அங்கே காமம் பொய்யாகி காதல் மெய்யாகிவிடும்.
Reply : 0 0
xlntgson Sunday, 24 July 2011 09:03 PM
Much ado about nothing;
consider sms secret or ignore, problem over!
Reply : 0 0
Hamza Monday, 25 July 2011 03:39 PM
குறுஞ் செய்தி அனுப்பிய குட்டி மாணவன் இன்னும் நிறைய யதார்த்தங்களை புரிய வேண்டியுள்ளது. இனம் , மதம் , மொழி , வயது, அந்தஸ்து போன்றவை பற்றி காதல் ஒரு போதும் பேசுவதில்லை, நாமே அதைப்பற்றிப் பேசுகின்றோம். காதல் என்பது ஒரு பொருள் அல்ல, அது ஓர் உணர்வேயன்றி வேறில்லை.............
Reply : 0 0
IBNU ABOO Wednesday, 27 July 2011 03:09 AM
அந்த குட்டி மாணவனுக்கு ஆசிரியையின் தோற்றத்தில் ஏற்பட்ட கவர்ச்சி தான் இந்த ஒருதலைக்காதல் .இப்படி எங்கும் கவர்ச்சி வயப்படும் மாணவர்கள் உண்டு .இந்த மாணவன் அதை வெளிப்படுத்தி உள்ளான் அவ்வளவுதான். ஹம்சா சொன்னதுபோல் அந்த மாணவன் யதார்த்தங்களை புரிய முயற்சித்தால் ஆசிரியைக்கு பென்சனும் கிடைத்து பேரப்பிள்ளைகளும் கிடைத்துவிடும்.
Reply : 0 0
Hamza Wednesday, 27 July 2011 09:35 PM
இந்த பிரச்சினையைப் பற்றி இப்னு அபூ யோசித்தது போன்று அந்த மாணவனோ ஆசிரியையோ இந்தளவு யோசித்திருக்க மாட்டார்கள்...
Reply : 0 0
shuraff Thursday, 28 July 2011 03:45 AM
இளம் வயதில் kadaley welipaduththiyadatku kideytha thandanaya? idu pawam.
Reply : 0 0
shuraff Saturday, 30 July 2011 12:13 AM
பிஞ்சில் பழுத்த பையா! மாதா பிதா குரு தெய்வம் என்று தமிழில் உள்ள பழமொழியை கற்றுதெளி!
Reply : 0 0
ibnu aboo Saturday, 30 July 2011 03:39 AM
தமிழை தாய் மொளியாககொண்டவர்களே மாதா,பிதா ,குரு தெய்வம் என்று ஐந்து வயதிலிருந்தே மனனம் செய்து கற்று பின்னர் வயதுக்கு வந்ததும் அந்த தெய்வங்களுக்கு காட்டும் அவமானங்களும் ,அநியாயங்களும் சொல்ல வாய் கூசும் .அவன் சின்னம் சிறிசு .குருவை தெய்வமாக நினைத்த தெய்வீக காதலோ
Reply : 0 0
mumdaj Friday, 05 August 2011 10:38 PM
காதலுக்கு age இல்லை
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago