Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2023 ஜூன் 25 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
தான் கர்பமாக இருப்பதை அறியாமல் 36 ஆண்டுகளுக்கும் மேலாக இரட்டை சிசுவை தனது வயிற்றில் சுமந்து வாழ்ந்து வந்திருக்கிறார் நாக்பூரை சேர்ந்த ஒரு நபர்.
நாக்பூரில் பிறந்த சஞ்சு பகத் அவரது பெரிய வயிற்றின் காரணமாக 'கர்ப்பிணி' என்று அவரது ஊர் மக்களால் கேலி கிண்டலுக்கு உள்ளானவர்.
ஆனால் உண்மையில் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால்,36 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது சொந்த இரட்டை உடன்பிறப்புகள் அவரது வயிற்றில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதுதான்.
சஞ்சு பகத் சிறுவனாக இருந்தபோது, அவரது வயிறு மிகவும் சிறியதாக இருந்ததாகவும்,
ஆனால் அவருக்கு 20 வயது ஆனபோது வயிறு வேகமாக வளர்ந்துள்ளது. ஆனால் அதை கண்டுகொள்ளாத சஞ்சு பகத்,ஒரு கட்டத்தில் மூச்சு விடுவதற்கே பெரும் அவதி அடைந்துள்ளார். இதன் காரணமாக வேலை செய்ய கூட மிகவும் சிரமப்பட்டுள்ளார்.
பின்னர் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து கொண்ட நிலையில் , முதலில் அவரது வயிற்றில் பெரிய கட்டி இருப்பதாக நினைத்த நிலையில்,பின்னர் அறுவை சிகிச்சையின் போது தான் தெரியவந்திருக்கிறது அவரது வயிற்றில் நிறைய எலும்புகள் மற்றும் சதைகள் வளர்ந்து இருப்பது.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர் பின்னர் உள்ளே பரிசோதித்தபோது கை,கால்கள், பிறப்புறுப்பின் சில பகுதிகள், தாடைகள் ஆகியவற்றைக் கண்டறிந்ததாக கூறியுள்ளார்.
அவரது வயிற்றில் கருவுக்குள் கரு உருவாகி இரட்டை ஆண் சிசு இருப்பது தெரியவந்துள்ளது.
இது மருத்துவத் துறையில் மிகவும் அரிதான நிகழ்வு என கூறப்படுகிறது.
இதையடுத்து சஞ்சு பகத்திற்கு அறுவை சிகிச்சை மூலம் இரட்டை சிசு அகற்றப்பட்ட நிலையில்,கிடைகப்பெற்ற கை கால்கள், தலை முடி, பிறப்புறுப்பு என உடற்பாகங்களை பார்க்க சஞ்சு பகத் மறுத்துவிட்டார்.
கடந்த 36 ஆண்டுகளுக்கு மேல் சஞ்சு பகத் தனது வயிற்றுக்குள் இரட்டை ஆண் சிசுவை சுமந்து வாழ்ந்துள்ளது மருத்துவத்துறையில் மிகவும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கருவில் கரு என்பது மிகவும் அரிதான ஒன்று என்றும் இது லட்சத்தில் ஒருவருக்கு தான் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .தற்போது சஞ்சு பகத் நலமுடன் இருப்பதாகவும் தனது அன்றாட வேளைகளில் அவர் சிரமமின்றி ஈடுபட்டு வருவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago